கண்டேன் காதலை படப்பிடிப்பு முடிந்தது!

By Staff

Bharath with Tamanna
மோசர் பேர் நிறுவனத்தின் சார்பில் ஜி தனஞ்செயன் தயாரிக்கும் கண்டேன் காதலை படப்பிடிப்பு திட்டமிட்டபடி சரியாக முடிவடைந்தது.

இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜப் வி மெட் படத்தின் ரீமேக்தான் கண்டேன் காதலை. பரத் - தமன்னா ஜோடியாக நடித்துள்ளனர்.

ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி, பழனி, தேனி, மதுரை உள்பட 75 வித்தியாசமான லொக்கேஷன்களில் இதன் படப்பிடிப்பு நடந்தது. திட்டமிட்டபடி சரியாக 60 நாட்களில் படத்தை எடுத்து முடித்துவிட்டார்கள். படப்பிடிப்பின் இறுதி நாளன்று படத்தில் நடித்த நாயகன் - நாயகி உள்ளிட்ட கலைஞர்கள் மற்றும் இயக்குநருக்கு வாழ்த்து தெரிவித்தார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

வித்யாசாகர் இசையில் 5 பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளன. ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு வித்யாசாகருக்கு அமைந்துள்ள பெரிய பட்ஜெட் படம் இது. எனவே, பாடல்கள் செவிக்கு விருந்தாக அமையும் அளவுக்கு சிறப்பாக வந்துள்ளதாக கூறுகிறார்கள் படக் குழுவினர்.

போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டன. வருகிற செப்டம்பரில் படத்தை வெளியிட்டுவிடும் திட்டத்தில் உள்ளது மோசர் பேர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X