விஷால் படம்: வேகம் காட்டும் பிரபுதேவா!
விஷால் - சமீரா ரெட்டி நடிக்கும் ஒரு படத்துக்கு ஐரோப்பிய நாடு ஒன்றில் படப்பிடிப்பை நடத்த நினைத்தார் பிரபுதேவா. குறிப்பாக சோபி சௌத்ரியுடன் விஷால் ஆடும் ஒரு படாலை மட்டுமாவது ஐரோப்பாவில் படமெடுக்க திட்டமிட்டார்.
ஆனால் அவர் நினைத்தமாதிரி விசா கிடைக்கவில்லை. அதற்காக கொஞ்சநாள் காத்திருக்க வேண்டிய நிலை. பார்த்தார் பிரபு தேவா. பின்னி மில்லிலேயே தான் எதிர்ப்பார்த்த மாதிரி ஒரு செட் போடச் சொல்லி படமாக்கி முடித்துவிட்டார்..
மீதிக் காட்சிகளை ஹைதராபாத் பக்கத்தில் பிதாரில் எடுத்துக் கொண்டிருக்கிறார். இன்றைய தேதிக்கு படத்தின் 90 சதவீத காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன. இன்னொரு பக்கம் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
ஜூனில் விவாகரத்து கிடைக்கவிருக்கிறது. ஜூலையில் நயன்தாராவுடன் திருமணம் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. திருமண நேரத்தில் எந்த டென்ஷனும் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பதால், அனைத்து பட வேலைகளையும் தயாரிப்பாளர்களே வியக்கும் அளவுக்கு வேகமாக முடித்து வருகிறாராம் பிரபு தேவா!
அதுக்காக படத்தை 'சுத்தி' கொடுத்துடாதீங்க... சுத்தமா கொடுங்க!!


Click it and Unblock the Notifications











