ஷூட்டிங்கின்போது கண்ணாடியை உடைத்துக் கொண்டு பாய்ந்த நடிகர் ஆர்கே காயம்
படப்பிடிப்பின்போது, கண்ணாடியை உடைத்துக் கொண்டு பாய்ந்து நடித்த நடிகர் ஆர்கேவுக்கு கண்ணாடிச் சிதறல்கள் குத்தி படுகாயம் ஏற்பட்டுப் போனது.
எல்லாம் அவன் செயல் படத்தில் வித்தியாசமான நாயகனாக நடித்து பிரபலமானவர் ஆர்கே. அதைத் தொடர்ந்து அழகர் மலையில் கிராமத்து நாயகனாக வந்து அசத்தினார். தற்போது பி.வாசு இயக்கத்தில் புலிவேஷம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சதா நடிக்கிறார்.
சென்னையில் ஒரு பங்களாவில் வைத்து ஆர்கே தொடர்பான சண்டைக் காட்சியை படமாக்கினார் பி.வாசு. கண்ணாடியை உடைத்துக் கொண்டு ஆர்கே பாய்வது போன்ற காட்சி அது.
ஆர்கேயும் புலி போல பாய்ந்துள்ளார். ஆனால் கண்ணாடிச் சிதறல்கள் ஆர்கேயின் முகம், கை, மார்பு என குத்திக் கிழித்து விட்டது. ரத்தம் குபுகுபுவென கொட்டவே உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி விட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
நடிக்க வேண்டியதுதான், அதற்காக இப்படியா விபரீதமாக நடிப்பது...


Click it and Unblock the Notifications











