வசிஷ்டர் பாலா வாயால் பாராட்டுப் பெற்ற ஆர்கே!
'பர்பெக்ஷனிஸ்ட்' பாலாவிடம் பாராட்டு பெறுவது அத்தனை சுலபமான காரியமல்ல. ஆனால் அதையும் சாதித்திருக்கிறார் நடிகர் ஆர்கே.
பாலா இப்போது இயக்கிவரும் அவன் இவன் படத்தில் ஆர்யா - விஷாலுக்கு இணையாக ஒரு பாத்திரத்தில் ஆர் கே நடித்துள்ளார்.
இந்தப் படத்துக்காக இவர் போட்டிருக்கும் கெட்டப் மிரட்டலானது. பாலாவிடம் அதிக டேக்குகள் வாங்காமல், சொன்னதை வெகு சின்ஸியராக செய்த ஆர்கேவை சரியாக 40 நாட்களில், "வேலை முடிந்தது.. சிறப்பாக செய்தீர்கள். அடுத்த புராஜெக்டை நீங்கள் தொடங்கலாம்", என்று கூறி அனுப்பி வைத்துள்ளார் பாலா.
இதைத் தொடர்ந்து தனது அடுத்த படமான கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை ஆரம்பித்துள்ளார் ஆர்கே.
இதில் அவர் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறார். அந்தக் கேரக்டருக்காக சட்டென்று உடல்மெலிந்து, தோற்றத்தை மாற்றி மீண்டும் பாலா முன் போய் நின்றாராம். ஏற இறங்க அவரைப் பார்த்த பாலா, "நான் யாரோ நிஜமான போலீஸ் ஆபீஸர் வந்துட்டார்னு நெனச்சிட்டேன்..." என்றாராம்.
தனது தோற்றத்துக்குக் கிடைத்த முதல் பாராட்டாக அதைக் கருதுவதாகக் கூறுகிறார் ஆர்கே.


Click it and Unblock the Notifications











