பிரமிக்க வைத்த பீட்டர் ஹெய்ன்-பரிசாக 'ஐபோன்'

ஆர்.எஸ். இன்போன்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் புதிய தயாரிப்புதான் கோ. ஜீவா, கார்த்திகா (நடிகை ராதாவின் மகள்), அஜ்மல், பிரகாஷ் ராஜ், கோட்டா சீனிவா ராவ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை இயக்குவது கே.வி.ஆனந்த்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ரிச்சர்ட் கேமராவில், சுபாவின் கதையுடன், அந்தோணியின் எடிட்டிங்குடன், பீட்டர் ஹெய்னின் சண்டைக் காட்சிகளுடன் படு விறுவிறுப்பாக உருவாகிறது கோ.
குமார், ஜெயராமன், ஜேம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டது. சில பாடல் காட்சிகளை மட்டுமே சுட வேண்டியுள்ளதாம். ஒரு பாடலை சீனாவில் சுட்டுள்ளனர். அடுத்து சில நாட்களில் நார்வே கிளம்புகின்றனர் இன்னொரு பாடலை படமாக்க.
படத்தின் முக்கிய அம்சம் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியாகும். சென்னை நகரின் மகா பிசியான ஏரியாக்களில் ஒன்றான மின்ட் தெருவில் வைத்து கிட்டத்தட்ட 20 நாட்கள் இந்தக் காட்சியை படமாக்கியுள்லனர்.
மக்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பையும் கொடுக்காமல் ஜீவா, அஜ்மல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் சம்பந்தப்பட்ட இந்தக் காட்சியை படமாக்கியுள்ளனர்.
அட்டகாசமாக வந்துள்ள இந்த சண்டையை பீட்டர் ஹெய்ன்ஸ் வடிவமைத்துள்ளார். எடிட் செய்த பின்னர் இந்தக் காட்சியைப் பார்த்த தயாரிப்பாளர் குமார் பிரமித்துப் போய் விட்டாராம். அட்டகாசமாக வந்திருப்பதாக பீட்டர் ஹெய்ன்ஸைக் கூப்பிட்டுப் பாராட்டியதோடு, அழகான ஐபோன் ஒன்றையும் பரிசாக அளித்து திக்குமுக்காட வைத்து விட்டாராம்.


Click it and Unblock the Notifications











