அடர்ந்த காடு... மிருகங்களுக்கு நடுவோ... - ரீமாவின் திக் திக் நிமிடங்கள்!

By Staff

Reema Sen
ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக அடர்ந்த காட்டுப் பகுதியில் பயங்கரமான மிருகங்களுக்கு நடுவே நடித்துக் கொடுத்தாராம் நடிகை ரீமா சென்.

ஆயிரத்தில் ஒருவன் படம் பெரும் பொருட் செலவில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. கார்த்தி-ரீமா சென் - ஆண்ட்ரியா நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் அனுபவம் குறித்து ரீமாசென் கூறியதாவது:

ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றி நான் என்ன சொன்னாலும் அது முழுமையாக இருக்காது. அவ்வளவு விஷயங்கள் உள்ளன.

அது ஒரு தனி அனுபவம். என் கேரியரில் நான் மறக்க முடியாத அனுபவங்கள். படத்தை தியேட்டரில் பார்க்கும்போதுதான் பிரமிப்பு தெரியும். இது ஆக்ஷனும் கூடிய பழிவாங்கலும் நிறைந்த கதை. கேட்கும்போது வழக்கமான கதையாகத் தெரிந்தாலும், அதை செல்வராகவன் கொடுத்துள்ள விதம்தான் இந்தப் படத்தின் ஸ்பெஷல். இந்தக் கதைக்குள்ள இவ்வளவு பேன்டஸி தரமுடியுமா என மூக்கின் மேல் விரல் வைப்பீர்கள்.

படத்தில் அனைவரது வேடமும் புதிதாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நானும் ஆண்ட்ரியாவும் நடித்துள்ளோம். ஆண்ட்ரியா திறமையான நடிகை. அவருக்கும் எனக்கும் படத்தில் சமமான வேடமுள்ளது.

பாம்புகளுக்கு நடுவே!

படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் காடுகளில் நடந்தது. இதனால் காட்டுப் பகுதியில் நடிக்க கொஞ்சம் பயந்தேன். பாம்புகளும் கொடிய மிருகங்களையும் பார்க்கும் நிலையும் ஏற்பட்டது. அதே நேரம், இது சாதாரண படம் கிடையாது. ஒரு பெரிய படத்தில் நடிப்பதால் சிரமங்களை சகித்துக்கொண்டேன்.

ஜெய்ப்பூர், ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்தபோது கடும் வெயில் இருந்தது. படத்தில் இடம்பெறும் காட்சிகளும் நடிப்பதற்கு சிரமமாக இருக்கும். வெயில் தாக்கத்தை சமாளித்தபடி நடித்ததும் சவால்தான் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X