தமிழும், பின்னே ஒரு மலையாள நடிகையும்...!

இது நிஜமா.. காதுல பூ சமாச்சாரமா என்பதை முழுவதும் படித்துவிட்டு முடிவு செய்து கொள்ளுங்கள்...
அந்த நடிகை பெயர் ரூபஸ்ரீ. மலையாள நடிகையான இவர் முதல்முதலாக தமிழில் அறிமுகமாகும் படம் மகனே என் மருமகனே. தமிழுக்காக தேன்மொழி என்று பக்கா தமிழ்ப் பெயரைச் சூட்டியுள்ளனர்.
டிபி கஜேந்திரன் இயக்கும் இந்தப் படத்தை ராஜ் டிவி தயாரிக்கிறது. நீண்ட நாட்களாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் படம். நான்கைந்து பிஆர்ஓக்கள் மாறிவிட்டார்கள்.
படத்துக்காக வைத்த பிரஸ் மீட்களிலும் எதிர்பார்த்த பலனில்லாத நிலையில், ஒரு பக்தி பிட்டை கொளுத்திப் போட்டுள்ளனர் தயாரிப்பாளரும் இயக்குநரும்.
இந்தப் படத்தில் முருகன் கோயிலில் கதாநாயகி சாமி கும்பிடுவது போன்ற காட்சி வருகிறதாம். அந்தக் காட்சியைப் படமாக்கும் போது, கதாநாயகி மீது தமிழ்க் கடவுளான முருகன் அருள் இறங்கிவிட்டதாம். உடனே சாமியாட்டம் போட்ட நடிகை, இயக்குநர் கஜேந்திரன் தலையில் கை வைத்து தமிழில் அருள்வாக்கு சொன்னாராம். அதாவது ஒரே ஒரு வரி அருள்வாக்கு அது (நடிகை கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல் இந்தப் படத்தின் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்)... "நான் இருக்கிறேன் மகனே கவலைப்படாதே" என்று சொன்னாராம்.
அடுத்த நிமிஷமே, இதை செய்தியாக்கி பத்திரிகை அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ளார் படத்தின் பிஆர்ஓ.
தமிழ்க் கடவுளை கும்பிட்ட மலையாள நடிகைக்கு அந்த முருகனே அருள்பாலித்து தமிழ் பேச வைத்துவிட்டான் என்கிறார் டிபி கஜேந்திரன்.


Click it and Unblock the Notifications











