கஷ்டப்பட்டு கிஸ்!

தமன்னா படு வேகமாக தமிழ் சினிமாவில் முன்னேறி வருகிறார். அவர் நடித்து வெளியாகவுள்ள படம் ஆனந்ததாண்டவம். புதுமுகம் சித்தார்த்துடன் இதில் ஜோடி போட்டுள்ளார் தமன்னா.
முதல் படத்திலேயே முன்னணி நடிகையான தமன்னாவுடன் ஜோடி போட்டிருப்பதால் புளகாங்கிதமடைந்து காணப்படுகிறார் சித்தார்த். அதை விட தமன்னாவுடன் ேசர்ந்து நடித்தது அவருக்கு குஷியைக் கூட்டியுள்ளதாம்.
அதேசமயம், அவருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும்போதுதான் தட்டுத் தடுமாறிப் போய் விட்டாராம் சித்தார்த்.
இதுகுறித்து சித்தார்த் கூறுகையில், எனது முதல் காட்சியே, தமன்னாவைக் கட்டிப்பிடித்து அவரது கன்னத்தில் முத்தமிட வேண்டும். இதற்கு எனக்கு மூன்று டேக் ஆகி விட்டது. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு தயக்கத்தில் தவறு செய்து விடுவேன். இது சாதாரண காட்சிதான். இருந்தாலும் 3 டேக் வாங்கி விட்ேடன்.
அழகான தமன்னா போன்ற நடிகைகளுடன் நடிக்கும்போது எந்த ஹீரோவுக்கும் இந்த உணர்வு ஏற்படத்தான் செய்யும் என்கிறார் சித்தார்த்.
இருந்தாலும் படம் முழுக்க இயல்பான காதலர்களாக தமன்னாவும், சித்தார்த்தும் வந்துள்ளனராம். அத்தனை காட்சிகளும் அழகாக வந்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications











