ஷாஹித்துக்கு கற்றுக் கொடுத்த ஆசின்-கடுப்பான காதலி பிரியங்காசோப்ரா

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ஷாஹித் கபூருக்கு எப்படி உச்சரிக்க வேண்டும் என கற்றுக் கொடுத்தார் நடிகை ஆசின். அப்போது பார்த்து அங்கு வந்த ஷாஹித்தின் புதிய காதலியான பிரியங்கா சோப்ரா, ஆசின் தனது காதலருக்கு கற்றுக் கொடுப்பதைப் பார்த்து காதில் புகை வரும் அளவுக்கு கோபமடைந்தாராம்.
பிரியங்கா சோப்ராவும், ஷாஹித் கபூரும் தற்போது நெருக்கமாக உள்ளனர். இந்த நிலையில் தமிழ் மற்றும் இந்தியில் வரும் ஒரு விளம்பரத்தில் ஷாஹித்தும், ஆசினும் இணைந்து நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் மும்பையில் நடந்தது.
இந்தியில் சரியாக நடித்து விட்ட ஷாஹித்துக்கு தமிழ் பதிப்புக்கான விளம்பரத்தில் நடித்தபோது உச்சரிப்புப் பிரச்சினை ஏற்பட்டது. இதைப் பார்த்த ஆசின், ஷாஹித்தை உட்கார வைத்து எப்படி உச்சரிப்பது என்பது குறித்து சொல்லிக் கொடுத்தார்.
அந்த நேரம் பார்த்துதான பிரியங்கா அங்கு வர வேண்டும். ஷாஹித்தை உட்கார வைத்து ஆசின் உச்சரிப்பு குறித்து கற்றுக் கொடுத்ததைப் பார்த்த பிரியங்காவுக்கு செம டென்ஷனாகி விட்டதாம். இருந்தாலும் அவையடக்கத்துடன் அந்த ஷாட் முடியும் வரை பொறுமையாக பல்லைக் கடித்துக் கொண்டு அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தாராம்.
ஷாட் முடிந்து ஷாஹித்துடன் அங்கிருந்து கிளம்பும் வரை பிரியங்கா முகத்தில் கடும் கோபம் குடிகொண்டிருந்ததாம்.
ஆனால், ஆசின் இதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லையாம். அதானே, அவருக்கென்ன கவலை..


Click it and Unblock the Notifications











