எந்திரன்: வேலூர் டு குல்லு-மனாலி!!

(விஞ்ஞானி) ரஜினி-ஐஸ்வர்யாராய் தொடர்பான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டன.
இன்னும் சில காதல் மற்றும் டூயட் காட்சிகளை குளு குளு பகுதிகளில் எடுக்கத் திட்டமிட்டிருந்த ஷங்கர் அதற்காக இன்னும் சில தினங்களில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குலு மனாலிக்குச் செல்கிறார், தனது யூனிட்டுடன்.
முதலில் டாப் ஸ்லிப் மற்றும் வால்பாறைப் பகுதிகளில் படமாக்கத் திட்டமிட்டிருந்த சில காட்சிகளை இப்போது குலு மனாலியில் படமாக்கப் போகிறார்கள்.
மெர்சிடிஸ் கார்...!:
இந்தக் காதல் காட்சிகளில் ஒரு மெர்சிடிஸ் கார் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் காரின் விலை ரூ. 1 கோடி என்று சிலரும், ரூ. 2 கோடி என்று சிலரும் கோலிவுட்டில் கூறி வருகிறார்கள்.
இந்த பென்ஸ் காருக்கு படத்தில் மிக முக்கியமான பங்குண்டாம்.
இப்படி வாங்கப்பட்ட காரில் ஒன்றை ஒரு காட்சிக்காக ஏற்கெனவே ஷங்கர் எரித்து விட்டதாகவும் கூறுகிறார்கள். ஆனால் எந்திரன் யூனிட்டிலோ இதெல்லாம் கட்டுக்கதை என்கிறார்கள். ரஜினி சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அவரே சொன்னால்தான் உண்மை என்னவென்று புரியும்.


Click it and Unblock the Notifications











