மோகினி நமீதாவை பார்க்க வந்த கமல்!

எந்திரனுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினி, உன்னைப் போல் ஒருவனுக்காக கலைஞானி கமல் என உச்ச நட்சத்திரங்கள் இருவரும் பக்கத்து பக்கத்து அரங்கில்தான் தீவிர படப்பிடிப்பில் உள்ளனர்.
இன்னும் சில அரங்குகளில் 6 தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் ஜோராக நடந்து கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று நமீதாவின் பெரும் கவர்ச்சியில் உருவாகிவரும் 'ஜகன்மோகினி'. விட்டலாச்சார்யா இயக்கத்தில் ஜெயமாலினி நடித்த பழைய படத்தின் ரீமேக்தான் இது.
என்கே விஸ்வநாதன் இயக்கும் இந்தப் படத்தை எச் முரளி தயாரிக்கிறார்.
பக்கத்து அரங்கில் கமல் இருப்பது தெரிந்ததால், அவரை தங்கள் படப்பிடிப்புத் தளத்துக்கு வருகை தருமாறு முரளியும் என் கே விஸ்வநாதனும் கேட்டுக் கொண்டனர். ஆனால் அப்போது கமல் வரவில்லை.
சில தினங்களுக்கு முன் திடீரென்று தளத்துக்கு வந்தார் கமல். அப்போது அரங்கில் நமீதா இருந்தார். கமல்ஹாசனைப பார்த்தவுடன், எழுந்து நின்று தனது வணக்கத்தைத் தெரிவித்தார். அவரை வாழ்த்திவிட்டு, பின்னர் படக்குழுவினரைச் சந்தித்து அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்ட கமல், பின்னர் மீண்டும் தனது அரங்குக்குத் திரும்பினார்.
கமலுடன் ஏற்கெனவே ஒரு படத்தில் நடிக்கவிருந்து வாய்ப்பு நழுவிப்போனது நமீதாவுக்கு. இந்தச் சந்திப்பின்போது அதை நினைவு கூர்ந்த நமீதா, தன்னை ஒரு காட்சியிலாவது பயன்படுத்திக் கொள்ளுமாறு கமலிடம் கேட்டுக் கொண்டாராம்!


Click it and Unblock the Notifications











