திட்டக்குடி படத்துக்கு எதிராக திரண்ட கிராமக்கள்

திட்டக்குடி என்ற பெயரில் ஒரு படம் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தின் நாயகன், பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பு வைத்திருப்பது போல காட்சிகள் வருகிறதாம். ஒரு காட்சியில் ஒரு பெண்ணிடம், உனக்கு எந்த ஊர் என்று நாயகன் கேட்க அவர் காருமாங்குடி என்று கூறுவார்.
இந்த காருமாங்குடி கிராமம், விருத்தாச்சலம் அருகே உள்ளது. தங்களது ஊர்ப் பெண்களை இழிவுபடுத்துவது போல வசனம் இருப்பதாக கருதிய கிராம மக்கள், விருத்தாச்சலம் ஜெய்சாய்கிருஷ்ணா தியேட்டருக்கு திரண்டு வந்தனர்.
அங்கு திட்டக்குடி படம் ஓடிக் கொண்டுள்ளது. இன்றுகாலை அங்கு குழுமிய கிராம மக்கள் எங்கள் ஊர்ப் பெண்களை கேவலமாக சித்தரிக்கும் இப்படத்தை திரையிடக் கூடாது என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து கிராம மக்களை அமைதிப்படுத்தினர். இதையடுத்து படத்தின் தயாரிப்பு ஆதித்யா செல்வன் இந்தக் காட்சி வரும்போது தியேட்டரில் சத்தம் இல்லாமல் செய்து விடுகிறோம் என்று கூறினார். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Click it and Unblock the Notifications











