'கூல்' பூனம்-'வெடவெடத்த' விஷ்ணு!
துரோகி படத்தில் பூனம் பாஜ்வாவுடன் மிக நெருக்கமாக நடிக்க வேண்டிய காட்சியில் வியர்த்து விறுவிறுத்துப் போய் விட்டாராம் ஹீரோ விஷ்ணு. இதனால் 10 டேக் வாங்கிய பின்னர்தான் பூனத்துடன் சரியாக நெருங்க முடிந்ததாம் அவரால்.
துரோகி என்று ஒரு படம். பூனம் பாஜ்வா நாயகியாக நடிக்கிறார். பூர்ணாவும் உண்டு படத்தில். விஷ்ணுவுக்கு இதில் ஜோடி பூனம். இருவருக்கும் இடையிலான ஒரு மகா நெருக்கமான காட்சி உண்டு. மிக நெருக்கமான காதல் காட்சியான இதில் நடிக்க முதலில் ஆர்வமாக இருந்தார் விஷ்ணு. ஆனால் பூனத்துடன் நெருங்கி நடிக்க ஆரம்பித்தபோது அவருக்கு வியர்த்து விறுவிறுத்துப் போய் விட்டதாம்.
இதனால் காட்சி சரியாக அமையவில்லை. இத்தனைக்கும் பூனம் தாராளமான மனதுடன் படு கூலாக இருந்துள்ளார். ஆனால் அவரிடம் நெருங்க முடியாமல் தவித்துள்ளார் விஷ்ணு. இதனால் 10 டேக் வாங்கியுள்ளார்.
அதன் பின்னர் 11வது டேக்கில்தான் பூனத்திடம் சரியான முறையில் நெருங்கி, இழைந்து நடித்தாராம்.
இப்படித்தான் வெண்ணிலா கபடிக் குழு படத்தின்போதும் விஷ்ணு காதல் காட்சியில் பதட்டமடைந்தாராம்.
இரண்டு படம்தானே ஆகிறது, போகப் போக சரியாகி விடும். அப்புறம் ஹீரோயின்கள்தான் பதட்டப்படுவார்கள் உங்களை நெருங்க!


Click it and Unblock the Notifications











