படப்பிடிப்பில் காயம்: பாலகிருஷ்ணாவுக்கு ஆபரேஷன்!

நயன்தாரா, நமீதா, சினேகா உல்லால் ஆகியோர் ஜோடியாக நடிக்கும் 'சிம்மா' படத்தின் ஷூட்டிங் மைசூரில் நடைபெற்று வருகிறது.
இதன் சண்டைக் காட்சிகளில் நடித்துக்கொண்டு இருந்த போது பாலகிருஷ்ணாவின் வலது காலில் காயம் ஏற்பட்டது.
காலை அசைக்க முடியாத அளவுக்கு வீக்கம் ஏற்பட்டதால் அவரை சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள கேர் கார்பரேட் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபரேஷன் நடைபெற்றது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தலைவர் சலீம் கூறினார்.
சிம்மா படத்தின் நாயகிகள் நயன்தாரா, நமீதா, சினேகா நடிகர் பாலகிருஷ்ணாவை நலம் விசாரித்தனர்.
Comments


Click it and Unblock the Notifications