கமல் கருத்து.. மாறியது க்ளைமாக்ஸ்!

இந்தப் படத்தை கமல்ஹாசனும் பார்த்துள்ளார். பார்த்தவர் தன் கருத்தையும் இயக்குநர் பிரபு சாலமனிடம் பகிர்ந்து கொண்டாராம்.
இவ்வளவு அழுத்தமான க்ளைமாக்சை மக்கள் மனம் தாங்கி ஏற்றுக் கொள்வார்களா? ரத்தமும் சதையுமான ஒரு படத்தில் ரணமும் வலியும் இருப்பது சகஜம்தான் என்றாலும் அது கொஞ்சம் அளவுக்கு மீறியதாக இருக்கிறதோ என்று தனது ஐயத்தை தெரிவித்தாராம் கமல். முடிந்தால் க்ளைமாக்சை மாற்றுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இதனால் சற்று குழம்பிப் போன இயக்குநர் சாலமன், சிண்டைப் பிய்த்துக் கொண்டுள்ளார்.
இறுதியில், படத்தின் க்ளைமாக்ஸை மாற்றிக் கொள்ளலாமே என படத்தின் உரிமையாளரான உதயநிதியும் கூறிவிட, வேறு வழியின்றி க்ளைமாக்ஸை மாற்றப் போகிறாராம் சாலமன்.
Comments


Click it and Unblock the Notifications