'தவறு செய்பவர்களை தண்டிப்பவர்கள் சாமி தான்'!

இப் படத்தில் நாயகனாக உதய்கார்த்திக் அறிமுகமாக,அவருக்கு ஜோடியாக வர்ஷா நடிக்கிறார்.இவர்களுடன் ஆதித்யா,பிரேம்குமார், சுகுமார், 'காதல்' கண்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
தவறு செய்பவர்களுக்கு கொடுக்கின்ற தண்டனைகள் தப்பு கணக்குகளில் சேராது. தவறு செய்பவர்களை தண்டிப்பவர்கள் எல்லோரும் சாமி தான். அதேபோலத்தான் இப்படத்தின் நாயகனும் தன்னை சிவனாக எண்ணிக்கொண்டு தவறு செய்பவர்களை தண்டிக்கிறான்.
தமிழ்ப்பட ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் படமாக காதல்,செண்டிமென்ட், ஆக்ஷன் கலந்த படைப்பாக உருவாகி வருகிறது நான் சிவனாகிறேன்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் வி.கே.ஞானசேகர்.
கே.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, படத்திற்கு இசையமைக்கிறார் கே.எஸ்.மனோஜ். படத்தொகுப்பை மாரீஸ்வரன் கவனிக்க, படத்தின் அனைத்து பாடல்களையும் நா.முத்துக்குமார், கே.நிஷாந்த்,வி.கே ஞானசேகர் எழுதுகிறார்கள். பிஆர்ஓ சக்திவேல்.
எம்.என்.கிரியேஷன்ஸ் சார்பில் படத்தை தயாரிப்பவர் சி.கே.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. ஜூலையில் படம் ரிலீஸ்.


Click it and Unblock the Notifications











