சூர்யாவுடன் நடித்தபோது ஸ்ருதி ஹாசனுக்கு காயம்!
வீடியோ...
ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுடன் நடித்தபோது கமல்ஹாஸன் மகள் ஸ்ருதி ஹாசனுக்கு காயம் ஏற்பட்டது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படம்தான் தமிழில் ஸ்ருதிக்கு முதல் படம்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று வேளச்சேரி, தாம்பரம் சாலையில் சண்டைக் காட்சியொன்று படமாக்கப்பட்டது. வில்லன்களுடன் சூர்யா மோதும்போது வில்லன் கூட்டத்தில் ஸ்ருதியும் சிக்கியது போல் காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்போது எதிர்பாராத விதமாக ஸ்ருதி அடிபட்டு காயம் அடைந்தார்.
இதையடுத்த படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஸ்ருதி ஓய்வு எடுத்து வருகிறார். சூர்யா சம்பந்தமான காட்சிகள் மட்டும் படமாகி வருகின்றன.
இந்த தகவலை தனது டுவிட்டர் தளத்தில் ஸ்ருதி வெளியிட்டுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications