சார்மி 'கிஸ்' - சிபி 'புஸ்'!

தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் கவர்ச்சி அலை பரப்பிக் கொண்டிருக்கும் சார்மி, நடித்துள்ள படம் லாடம். படம் முழுக்க கவர்ச்சியை கை நிறைய அள்ளி வீசியுள்ளார் சார்மி.
இதுபோதாதென்று ஹீரோ அரவிந்த்துடன் அவர் கொடுத்துள்ள லிப் லாக் கிஸ் கோலிவுட் முழுக்க ஏற்கனவே பிரபலமாகி விட்டது. கோலிவுட்டினர் இந்தக் காட்சியைக் கேள்விப்பட்டும், பார்த்தும் ரகளையாகிவிட்டனர். அந்த அளவுக்கு காட்சி படு ஹாட்.
சமீபத்தி்ல் நடந்த லாடம் படத்தின் ஆடியோ ரிலீஸின்போது, இந்த லிப் லாக் காட்சியைப் போட்டுக் காட்டி அரங்கத்தில் குப்பென சூட்டைக் கிளப்பி விட்டனர்.
இந்தக் காட்சியைப் பார்த்து அசந்து போன சிபிராஜ், தனக்கு அருகில அமர்ந்திருந்த, தனக்கு பிரேக் கொடுத்த லீ படத்தின் இயக்குநர் பிரபு சாலமோனிடம், லீ படத்தில் எனக்கு இப்படியொரு சீனை வைக்காம விட்டுட்டீங்களே என்று ஜாலியாக புலம்பினாராம்.
இதை பிரபுவுக்கு அடுத்த சீட்டில் உட்கார்ந்திருந்த அப்பா சத்யராஜ் கேட்டபடி, புன்னகையை உதிர்த்தபடி அமர்ந்திரு்நதார்.!
சிபி ஏக்கத்தை தீர்த்து வைக்கப் போவது யாரோ...


Click it and Unblock the Notifications











