யானையால் மணிரத்தினத்திற்கு மேலும் சிக்கல்

படப்பிடிப்பில் அனுமதியின்றி யானையைப் பயன்படுத்தியதற்காக அவருக்கு விலங்குகள் பாதுகாப்பு வாரியத்திடமிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்துள்ளது.
நேற்று முன்தினம் அதிரப்பள்ளியில் மணிரத்னம் தனது ராவண் படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். கதைப்படி அந்தக் காட்சியில் ஒரு யானை பங்கேற்க வேண்டும். அதற்காக ஒரு கோயில் யானை வரவழைக்கப்பட்டது.
புதன்கிழமை மாலை அந்த யானைக்கு திடீரென மதம் பிடித்தது. இதனால் அந்த யானை படப்பிடிப்புத் தளத்தையே துவம்சம் செய்தது. பாகனை தூக்கிப் போட்டு மிதித்துக் கொன்றது.
இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, மணிரத்னம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர், அங்கிருந்து வோறு இடத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இந்த நிலையில், மத்திய விலங்குகள் நல வாரியத்திடமிருந்து மணி ரத்னத்துக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.
அதில் வாரியத்தின் அனுமதியின்றி எப்படி யானையை படப்பிடிப்புக்குப் பயன்படுத்தலாம். உடனடியாக இதற்கு உரிய விளக்கம் தேவை, இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த யானை படப்பிடிப்புத் தளத்துக்கு வரவழைக்கப்பட்டது உண்மையாக இருந்தாலும், அதை வைத்து அவர் எந்தக் காட்சியும் எடுக்கவி்ல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இப்போது மணிரத்னம் ஊட்டியில் ராவண் இறுதிக் கட்ட காட்சியை எடுத்துக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











