வயலின் கற்ற பூனம்!

இந்தப் படத்துக்காக பூனம் பஜ்வா வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்டாராம். தனது தெனாவட்டு அனுபவத்தை இப்படிக் கூறுகிறார் பூனம் பஜ்வா:
இயக்குனர் கதிரிடம் இப்படத்தின் கதையைக் கேட்ட கணத்திலேயே எனக்குப் பிடித்துவிட்டது. இதில் வயலின் டீச்சராக நான் நடிக்கிறேன். சிறுவர், சிறுமிகளுக்கு வயலின் கற்றுத் தரும் நடுத்தர குடும்பத்து பெண் வேடம். அனுபவித்து நடித்திருக்கிறேன்.
எனக்கு எதிர் மறையான கேரக்டரில் ஜீவா நடிக்கிறார். எங்களுக்குள் ஏற்படும் காதல், ஜீவாவை மாற்றுகிறது. இப்படத்தில் வயலின் டீச்சர் வேடம் என்பதால் வயலின் வாசிக்க பயிற்சி எடுத்தேன்.
தெனாவட்டு ஷூட்டிங் அனுபவம் மறக்க முடியாத ஒன்று. சென்னை, மதுரையில் ஷூட்டிங் நடந்தது. ஒவ்வொரு காட்சியையும் ஷாட்களையும் ஏற்கெனவே இயக்குனர் கதிர் திட்டமிட்டிருந்தார். அதன்படி எந்த குழப்பமும் இல்லாமல் ஷூட்டிங் நடத்தினார். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் நன்றாக வந்துள்ளன. காட்சிகளுடன் கலந்து வருவதால் பாடல்கள் அனைத்துமே சூப்ராக வந்துள்ளன..," என்கிறார் பூனம்.
தனது முதல் படமான சேவல் குறித்து பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும், தனது கவர்ச்சி பெரிதாகப் பேசப்படுவதில் ஏக மகிழ்ச்சியாம் பூனம் பஜ்வாவுக்கு.


Click it and Unblock the Notifications











