அரவான் படப்பிடிப்பில் ஸ்டன்ட் கலைஞர் மரணம்!

By Shankar

Aadhi and Pasupathi
வசந்த பாலன் இயக்கும் அரவான் படப்பிடிப்பில் பங்கேற்ற ஸ்டன்ட் கலைஞர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

ஆதி, தன்ஷிகா, பரத் நடிக்கும் படம் அரவான். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மதுரையில் தொடங்கி தொடர்ந்து நடந்து வந்தது. சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டபோது, அதில் பங்கேற்ற ஒரு ஸ்டன்ட் கலைஞர் மரணமடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக மதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்த கலைஞரின் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. இது இயல்பான மரணம் என்பதை உறுதிப்படுத்திய பிறகு, உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர் போலீசார்.

இந்த மரணத்தால், அரவான் படப்பிடிப்பு ஒருநாள் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரபல இந்தி நடிகர் கபீர் பேடி சிறப்பு வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X