யானை! - தப்பிய கார்த்தி, ரீமா!!

By Staff


சாலக்குடியில், ஷூட்டிங் போனபோது யானைக் கூட்டம் புகுந்ததால் ஆயிரத்தில் ஒருவன் ஷூட்டிங்குக்காக போடப்பட்டிருந்த செட்டுகள் நாசமாகின. ஹீரோ கார்த்தி, ஹீரோயின் ரீமா சென் உள்ளிட்டோர் அதிர்ஷ்டவசமாக தப்பிப் பிழைத்தனர்.

Click here for more images

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படம் ஆயிரத்தில் ஒருவன். பருத்தி வீரன் கார்த்திதான் நாயகன், ரீமா சென்தான் நாயகி.

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஒரு வராமாக கேரள மாநிலம் சாலக்குடியில் நடந்து வருகிறது. காட்டுக்குள் பெரிய பெரிய செட் போட்டு படம் பிடித்து வருகின்றனர்.

நேற்று மாலை படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது 10க்கும் மேற்பட்ட 'கணபதிகள்' உள்ளே புகுந்து விட்டனர். போட்டிருந்த செட்டுக்களை துவம்சம் செய்து விட்டனர். கேமரா உள்ளிட்ட பல சாதனங்களும் இதில் சேதமடைந்தன.

யானைக் கூட்டம் உள்ளே புகுந்ததைப் பார்த்த அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஹீரோ கார்த்தி, ரீமா சென், இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் ஏற்கனவே ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு போயிருந்தனர்.

வனத்துறையினருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினர். மேலும், தினசரி மாலை சீக்கிரமே படப்பிடிப்பை முடித்து விட்டு போய் விடுமாறும், யானைகளால் பிரச்சினை ஏற்படலாம் என்றும் படப்பிடிப்புக் குழுவினரை அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

More from Filmibeat

Read more about: reema
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X