தர்பார் அப்டேட்: பொங்கலுக்கு ரஜினி தர்பார்... வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்

Recommended Video

Watch Video : Hard yet fun team of DARBAR

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு ரஜினி காந்த் ஐபிஎஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. தர்பார் திரைப்படம் 2020 தைப்பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கத்தி, துப்பாக்கி போன்ற திரைப்படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் படம் தர்பார். கடந்த ஜனவரியில் வெளியான பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி நடித்து வரும் திரைப்படம் இது. லைகா நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

A.R.Murugadass has released the Darbar Movie shooting spot video in Twitter

தர்பார் படத்தின் செகண்ட் லுக் சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள இந்த சமயத்தில் செகண்ட் லுக்கின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது விருந்தாகியுள்ளது. மேலும் இதன் இசை வெளியீட்டு விழா நவம்பர் மாதத்தில் நடைபெறும் என்று படத்தின் இசையமைப்பாளர் அறிவித்துள்ளார்.

பல வருடங்களுக்கு பிறகு ரஜினி காந்த் ஐபிஎஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில், தர்பார் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. அந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றினை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் தர்பார் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் உள்ளிட்ட பலர் இந்த படப்பிடிப்பு குறித்த அவர்களது அனுபவங்களை பகிர்கின்றனர். சந்தோஷ் சிவன் கூறுகையில், இந்த படப்பிடிப்பில் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் சந்தோஷம் என்றார். மேலும் பல துணை நடிகர்கள் தங்களுக்கு கிடைத்த இந்த அறிய வாய்ப்பினை பற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

அவ்வப்போது இப்படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் மிகவும் யூத்தாகவும், ஸ்டைலாகவும் இருப்பது போல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் ரஜினியுடன் யோகி பாபுவும் இணைந்துள்ளார். தர்பார் திரைப்படம் 2020 தைப்பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X