ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகையை முடியை இழுத்துப்போட்டு அடித்த 'ஜோதிகா'! ரணகளமான படப்பிடிப்பு தளம்!
Recommended Video
ஹைதராபாத்: படப்பிடிப்பு தளத்தில் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஒருவர் டிவி நடிகையை முடியை இழுத்துப்போட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு நடிகை ராக மாதுரி. தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் இவர் ஆந்திர மக்களிடம் மிகவும் பிரபலமானவர்.
இவர் நடித்த ஜோதி என்ற சீரியல் ஆந்திர மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவரை அவருடன் பணிபுரியும் ஜோதிகா என்ற ஹேர் ஸ்டைலிஸ்ட் கடுமையாக தாக்கியுள்ளார்.

மாயமான சங்கிலி
இதற்கான காரணம் என்னவென்றால் கடந்த 16ஆம் தேதி வழக்கம்போல் ஷுட்டிங்கை முடித்துவிட்டு ராக மாதுரி காரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, தான் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலி மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

போலீஸ் விசாரணை
இதைத்தொடர்ந்து தன்னுடன் பணிபுரிந்த சிகை அலங்கார நிபுணர் ஜோதிகா மீது சந்தேகம் அடைந்த நடிகை ராக மாதுரி போலீஸில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் ஜோதிகாவையும் அவரது உதவியாளரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

காரில் கிடந்த செயின்
ஆனால் நகையை எடுக்கவேயில்லை என அடித்துக்கூறினர் ஜோதிகாவும் அவரது உதவியாளரும். இந்நிலையில் மாதுரியின் காரிலேயே அவரது தங்கச் செயின் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கொலைக்காண்டில் இருந்த ஜோதிகா
இல்லாத ஒன்றை கூறி தங்களின் மீது திருட்டு பழி சுமத்திய நடிகை மாதுரியின் மீது கொலைக்காண்டில் இருந்தனர். இந்நிலையில் மாதுரி இருந்த ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற ஜோதிகா, மாதுரியின் முடியை இழுத்து போட்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.

பரபரப்பு
இதனால் அந்த படப்பிடிப்பு தளமே அல்லோகளப்பட்டது. ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகை ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











