'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி'க்காக காமத்துப் பாலில் ஒரு டூயட்!

By Shankar

Aayiram Muthangaludan Thenmozhi Movie
திரைப்பட உருவாக்கம் என்பதில் நாளுக்கு நாள் வரும் புதிய உத்திகளை முறைப்படி பயன்படுத்தினால் ரசிகனுக்கு மட்டுமல்ல, அதில் நடிக்கும் கலைஞர்களுக்கும் புதிய அனுபவமாக அமையும்.

விரைவில் வரவிருக்கும் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி படம் அப்படியொரு அனுபவத்தைத் தரும் என்கிறார் படத்தின் இயக்குநர் சண்முகராஜ்.

ஏன்? எதை வைத்து இந்த அழுத்தமான நம்பிக்கை?

"இந்தப் படத்தின் எந்தக் காட்சியும் ஏனோ தானோவென்று எடுக்கப்பட்டதில்லை. முழுக்க முழுக்க காதல் கதை என்றாலும், அதை மிக நேர்த்தியாக எடுத்துள்ளோம். நேர்த்தி என்ற வார்த்தையை நான் பிரயோகிக்கக் காரணம், இந்தப் படம் முழுவதையும் முன்கூட்டியே ஒத்திகை பார்த்து எடுத்ததுதான்.

திருவண்ணாமலையில் ஒரு பெரிய பங்களாவை எடுத்து, படத்தின் ஹீரோ ஹீரோயின் உள்ளிட்ட 70 பேரையும் தங்க வைத்து ஒத்திகை பார்த்தோம். எந்தெந்த ஷாட்களை எந்த லொகேஷனில் எடுக்க வேண்டும் என்பதைக் கூட அந்த இடத்துக்கே போய் ஒத்திகை பார்த்தோம். இதை ஒரு வீடியோ காமிராவில் பதிவு செய்தோம்.

பின்னர், உண்மையான படப்பிடிப்புக்குப் போனபோது, எங்களுக்கு சிரமமே தெரியவில்லை. பல காட்சிகளை புதுமுக நடிகர்களே ஒரே டேக்கில் ஓகே செய்தனர்," என்றார்.

அப்படியென்றால் இரட்டை செலவல்லவா என்று கேட்டால், இல்லைவே இல்லை. இதுதான் சிக்கனம் என்கிறார் சண்முகராஜ். படத்தின் ஹீரோ புதுமுகம் வெங்கடேஷ். நாயகி புதுமுகம் அக்ஷரா.

படத்துக்கு இசை தாஜ் நூர். களவாணிக்கு இசையமைத்து மனதைக் கவர்ந்த அதே தாஜ் நூர்தான். இவர் உண்மையிலேயே இசையமைக்க ஒப்புக் கொண்ட முதல் படம் இந்த ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழிதானாம். ஆனால் களவாணி முந்திக் கொண்டது.

படத்தில் திருவள்ளுவரின் காமத்துப் பாலிலிருந்து குறள்களைத் தொகுத்து தனி டூயட் உருவாக்கியிருக்கிறாராம் தாஜ் நூர்.

ஆஹா... கேட்கணுமே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X