தெலுங்கு படப்பிடிப்பில் விபத்து... தப்பினார் லட்சுமிராய்; கேமராமேன் படுகாயம்!

இதில் படத்தின் ஒளிப்பதிவாளருக்கு பலத்த அடிபட்டது. லட்சுமி ராய், பாலகிருஷ்ணா ஆகியோர் எந்த காயமும் இல்லாமல் தப்பினார்கள்.
இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினம் வனப் பகுதியில் கடந்த இரு வாரங்களாக நடந்து வருகிறது. பரிசூரி முரளி இயக்குகிறார்.
படத்தின் ஒரு காட்சியில் வெடிவிபத்தை படமாக்கிக் கொண்டிருந்தார் ஒளிப்பதிவாளர் விஜயகுமார். அப்போது எடை தாங்காமல் திடீரென்று அறுந்து விழுந்தது கிரேன். இதில் விஜயகுமார் படுகாயமடைந்தார். அவருடன் மேலும் 5 பேருக்கும் காயம் ஏற்பட்டது. படப்பிடிப்புத் தளத்தில் இருந்த இயக்குநர், ஹீரோ, நடிகை லட்சுமிராய் ஆகியோர் தப்பினர்.
விஜயகுமாருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் குணமாகி வந்தபிறகுதான் அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஆரம்பிக்கும்.
ஏற்கெனவே இந்தப் படம் சில சிக்கல்களால் தாமதமாகி வருகிறது. கடந்த வாரம் வனத்துறை விதிகளை மீறியதாக படக்குழுவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











