Raja Bheema.. யானை மேல் இருந்து தவறி விழுந்த ஆரவ்.. படப்பிடிப்பில் பரபரப்பு!

ராஜ பீமா படப்பிடிப்பில் யானை மேல் இருந்து ஆரவ் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: ராஜ பீமா படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக நடிகர் ஆரவ் யானை மேல் இருந்து தவறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிக் பாஸ் முதல் சீசன் மூலம் பிரபலமான நடிகர் ஆரவ், தற்போது ராஜ பீமா என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் நரேஷ் இயக்கும் இப்படத்தினை சுரபி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

Actor Arav injured in Raja Bheema shooting

விலங்கு சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆரவ்வுடன் பீட்டர் என்ற யானையும் முக்கிய கதாபாத்திரமாக நடித்து வருகிறது. படத்தின் முக்கியமான காட்சிகளை தாய்லாந்தில் படம் பிடிக்கும் குழுவினர், ஒரு சில காட்சிகளை பொள்ளாச்சியிலும் படம் பிடித்தனர் .

கடந்த 7 நாட்களாக கஞ்சன்புரியின் அடர்ந்த காடுகளில் ஓங்கி வளர்ந்த ராட்சச மரங்களுக்கு இடையே படமாக்கி வருகின்றனர். ஒரு காட்சியில் எதிர்பாராத விதமாக ஆரவ் யானை மீதிருந்து கீழே விழுந்தார். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக படக்குழுவினர் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால், முதலுதவி பெறுவதற்கு முன்னதாகவே மீண்டும் நடிக்க தயாராகி படக்குழுவிற்கு ஆச்சர்யம் தந்துள்ளார் ஆரவ்.

Actor Arav injured in Raja Bheema shooting

உடற்பயிற்சி மூலம் உடல் வலிமையும், மனத்திடமும் கொண்டதால் ஆரவ், உடனடியாக அடுத்தக் காட்சிக்கு தயாரானதாக படக்குழுவினர் பாராட்டியுள்ளனர்.

இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் சுரபி பிலிம்ஸ் எஸ்.மோகன் கூறுகையில், "இதுவே அவரின் அர்பணிப்பையும் பேரார்வத்தையும் காட்டுகிறது. இன்னும் 7 நாட்களில் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நிறைவுபெறும். சென்னையில் கடைசி கட்ட படப்பிடிப்பு எஞ்சியுள்ள நிலையில் ராஜபீமா கோடை விருந்தாக திரைக்கு வரும்" என்றார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X