நைட் ஷூட்டிங்கில் ரசிகரின் வீட்டில் சமைத்து சாப்பிட்ட அருண் விஜய்!
சென்னை : நடிகர் அருண் விஜய் இப்பொழுது ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்து வருகிறார்
கடும் போராட்டத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள அருண்விஜய் அடுத்தடுத்து ஆக்சன் கதைகளில் நடித்து வெற்றிகளை பெற்று வருகிறார்
இந்த நிலையில் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் ரசிகர் ஒருவரின் வீட்டில் லைட் ஷூட்டிங் இடைவேளையில் அவர்களுடன் இணைந்து சமைத்து சாப்பிட்ட அனுபவத்தை நெகிழ்ந்து பகிர்ந்துள்ளார்.

வில்லனாக நடித்து ரீ என்ட்ரி
பிரபலமான திரைக் குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி கொண்டிருந்த அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரீ என்ட்ரி கொடுத்த அருண் விஜய்க்கு இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது

ஆக்சன் ஹீரோவாக
என்னை அறிந்தால் வெற்றியை தொடர்ந்து செக்க சிவந்த வானம், தடம், குற்றம் 23 உள்ளிட திரைப்படங்கள் வரிசையாக இவருக்கு ஹிட்டடித்தது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இப்பொழுது மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக அருண் விஜய் இருக்கிறார். தனது ஒவ்வொரு படங்களின் கதைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து ஆக்ஷன் கதைகளில் இருப்பதால் தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்து வருகிறார்.
Recommended Video

அண்ணனாக சமுத்திரக்கனி
இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் இன்றுவரை எந்தவொரு திரைப்படத்திலும் இணைந்து பணியாற்றாமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது முதல்முறையாக இருவரும் இணைந்து புதிய திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றனர். முழுக்க முழுக்க கிராமத்து கதைகளில் குடும்பப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்திற்கும் யானை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தை டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரித்து வருகிறது. அருண் விஜய்க்கு ஜோடியாக மீண்டும் பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.மேலும் ராதிகா சரத்குமார், யோகி பாபு விஜய் டிவி புகழ், கே.ஜி.எப். பட வில்லன் ராமச்சந்திர ராஜு, தலைவாசல் விஜய், ராஜேஷ், இமான் அண்ணாச்சி,அபிராமி அம்மு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் .
அருண் விஜய்யின் அண்ணனாக சமுத்திரக்கனி நடித்துள்ளார்.

ரசிகரின் வீட்டில் சமைத்து சாப்பிட்டதை
யானை,அக்னி சிறகுகள்,பாக்சர், பார்டர்,சினம் என அடுத்தடுத்த படங்கள் அருண் விஜய்க்கு வெளியாக இருக்க சமீபத்தில் இரவு படப்பிடிப்பு நேரத்தில் ரசிகர் ஒருவரின் வீட்டில் சமைத்து சாப்பிட்ட அனுபவத்தை இப்பொழுது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எந்தவித பந்தாவும் இல்லாமல் மிகவும் எளிமையாக ரசிகரின் வீட்டிலே அவர்களுடன் இணைந்து சமைத்து சாப்பிட்டதை பகிர்ந்த அருண்விஜய்க்கு இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் குவிகிறது.


Click it and Unblock the Notifications











