அடிப்பட்ட கையோடு கேஜிஎஃப் வில்லனுடன் அதிரடி ஆக்‌ஷன் காட்சியில் நடித்து முடித்த அருண் விஜய்!

சென்னை: இயக்குநர் ஹரி இயக்கத்தில் ஏவி 33 படத்தில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய்க்கு சமீபத்தில் வலது கரத்தில் லேசான காயம் ஏற்பட்டது.

காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிரடி சண்டைக் காட்சி ஒன்றிலும் நடிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ள 8 மாத குழந்தை கிளாடி சாராவின் உயிர் காக்க உதவுங்கள்

இந்நிலையில், அடிப்பட்ட கையோடு அந்த ஆக்‌ஷன் காட்சியை முடித்து விட்டதாக படக்குழுவினருடன் படகில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார் நடிகர் அருண் விஜய்.

மச்சான் படம்

மச்சான் படம்

இயக்குநரும் ஹரியும் நடிகர் அருண் விஜய்யும் உறவினர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஹரி இயக்கத்தில் நடிக்க இருந்த சூர்யா திடீரென விலக அடுத்ததாக அருண் விஜய்யை வைத்து ஏவி 33 படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஹரி.

சாமி ஸ்கொயர் ஃபிளாப்

சாமி ஸ்கொயர் ஃபிளாப்

சியான் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி திரைப்படம் இயக்குநர் ஹரிக்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. மீண்டும் ஹரி மற்றும் சியான் விக்ரம் இணைந்து சாமி ஸ்கொயர் படம் உருவாகிறது என்றதும் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஆனால், நான் சாமி அல்ல பூதம் என விக்ரம் வசனம் பேசி நடித்த சாமி ஸ்கொயர் பெரும் தோல்வியை தழுவ இயக்குநர் ஹரிக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது.

டிராப்பான அருவா

டிராப்பான அருவா

விக்ரமுடன் மீண்டும் இணைந்தது வொர்க்கவுட் ஆகவில்லை. சிங்கம் சூர்யாவுடன் மீண்டும் இணைவோம் என நினைத்து அதிரடியாக அருவா பட அறிவிப்பை வெளியிட்டார் இயக்குநர் ஹரி. ராஷி கன்னா ஜோடி, தீபாவளிக்கு படம் ரிலீஸ் உள்ளிட்ட அறிவிப்புடன் மின்னல் வேகத்தில் ஆரம்பமான அருவா சில பல காரணங்களால் அப்படியே டிராப் ஆனது.

ஏவி 33

ஏவி 33

அருவா கைவிட்டுப் போன நிலையில், மச்சான் அருண் விஜய் ஹரிக்கு கைக்கொடுக்க ஏவி 33 படம் பூஜைப் போட்டு ஆரம்பிக்கப்பட்டது. அருவா படத்தின் கதையா? அல்லது புதிய கதையா? என்பது குறித்த எந்த விளக்கத்தையும் படக்குழு வெளியிடவில்லை. அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

கையில் காயம்

கையில் காயம்

அருண் விஜய்யின் வாட்ட சாட்டமான உடம்பிற்கு ஆக்‌ஷன் காட்சிகளை இயக்குநர் அள்ளி வீசி வருவது வழக்கமான ஒன்று தான். அதிரடியான சண்டைக் காட்சிகளில் நடித்து வந்த அருண் விஜய்க்கு திடீரென வலது கரத்தில் லேசான காயம் ஏற்பட ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

அதிரடி ஆக்‌ஷன் காட்சி

அதிரடி ஆக்‌ஷன் காட்சி

நாளை மறுநாள் அதிரடியான ஆக்‌ஷன் காட்சியை படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம், அதற்குள் கை சரியாகி விடும் என நம்புகிறேன் என படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அருண் விஜய் கூறி இருந்த நிலையில், வெற்றிகரமாக அந்த சண்டைக் காட்சியை தீவு ஒன்றில் படமாக்கி முடித்துள்ளனர்.

கேஜிஎஃப் ராம்

கேஜிஎஃப் ராம்

கேஜிஎஃப் படத்தில் மெர்சல் காட்டிய நடிகர் ராம் சுல்தான் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில், நடிகர் அருண் விஜய்யின் ஏவி 33 படத்திலும் அவர் தான் வில்லனாக நடித்து வருகிறார். அவருடன் அருண் விஜய் சண்டை போடும் அதிரடி ஆக்‌ஷன் காட்சி தான் கையில் அடிப்பட்ட இந்த சூழலிலும் வெற்றிகரமாக எடுக்கப்பட்டு விட்டதை அருண் விஜய் போட்டோ போட்டு ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

எங்கே ஷூட்டிங்

எங்கே ஷூட்டிங்

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படம் சமீபத்தில் ராமேஸ்வரத்தில் படமாக்கப்பட்டு இருந்தது. இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் ஏவி 33 படத்தின் ஷூட்டிங்கும் ராமேஸ்வரம் தீவில் தான் எடுக்கப்பட்டு இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X