மீசையை முறுக்கிவிட்டு மாஸ்காட்டிய அருண்விஜய்… ‘AV33‘ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் !
சென்னை : அருண் விஜயின் 33வது படத்தின், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இப்படத்தில் பிரியா பவானி சங்கர் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், யோகிபாபு, ராதிகா சரத்குமார், ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அறிமுகம்
சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறைமாப்பிள்ளை படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் அருண்குமார். பின்னாளில் தனது பெயரை அருண்குமார் என்று மாற்றிவைத்துக்கொண்டார். அந்த படத்தில் அமுல் பேபி போல நல்ல கொழுக்கு கொழுக்கென இருந்தார் அருண்விஜய். மணிவண்ணன், செந்தில், கவுண்டமணி என படம் முழுக்க நகைச்சுவைக்கு சிறிதும் பஞ்சமில்லால் படம் கலகலப்பாக செல்லும் இருப்பினும் இந்த படம் எதிர்பார்த்தை வரவேற்பை அருண்விஜய்க்கு பெற்றுத்தரவில்லை.

ஒருசில படங்களில்
முறை மாப்பிள்ளை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. பிரியம், கங்கா கௌரி, காத்திருந்த காதல், துள்ளித் திரிந்த காலம், கண்ணால் பேசவா போன்ற படங்களும் எதிர்பார்த்த அளவு நற் பெயரை இவருக்கு பெற்றுத்தரவில்லை.

வெற்றிப்பெறவில்லை
சேரன் இயக்கிய 'பாண்டவர் பூமி' அருண்விஜய்க்கு ஒரு திருப்புமுனை படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 'பாண்டவர் பூமி' வெற்றி பெற்ற படம் தான் என்ற போதிலும், இதில் அருண்விஜய் தனது கதாபாத்திரத்தின் தேவை உணர்ந்து அழகாக நடித்திருப்பார். இயற்கை, ஜனனம், அழகாய் இருக்கிறாய் பயமாக இருக்கிறது. தவம் என பல படங்களில் தொடர்ந்து நடித்தாலும் இவரால் பிரகாசிக்க முடியவில்லை.

மிரட்டும் வில்லனாக
அஜித்துடன் இணைந்து "என்னை அறிந்தால்" படத்தில் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டும் வில்லனாக நடித்து ரணகளப்படுத்தி இருப்பார். அஜித்துக்கு முன்னால் அசால்ட்டாக நடித்து அசத்திய அருண்விஜய்க்கு இப்படம் ஒரு கம் பிரேக் படமாக அமைந்தது. திரையில் அதாரு காட்டிய இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

கவனமாக கதைத்தேர்வு
அருண் விஜய் தற்போது கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். குற்றம் 23ல் மிடுக்கான போலீஸ் அதிகாரியாகவும், மணிரத்னம் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் செம்ம ஸ்டைலாக வெளியான செக்கசிவந்த வானம் படத்தில் ஒரு ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அடித்து தும்சம் செய்து இருப்பார் அருண்விஜய். தடம் படத்தில், எழில், கவின் என்ற இரட்டை கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி, ஆக்சன் , ரொமான்ஸ் என அனைத்திலும் புகுந்து விளையாடி இருப்பார்.

அருண் விஜய்33
இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக AV33 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புதளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில், மீசையை முறுக்கிவிட்டு மாஸாக இருக்கிறார் அருண்விஜய். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்தவுடன் தலைப்பு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பிரியா பவானி சங்கர் ஜோடி
அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். மேலும், பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு, கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார், ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றார்கள். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

கைவசம் பல படங்கள்
அருண் விஜய் அக்னி சிறகுகள், சினம், பாக்சர் மற்றும் பார்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டதும் திரைப்படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











