பேக்கப் சொல்லியாச்சு... சண்டையுடன் முடிந்த மாரி 2 ஷூட்டிங்!
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாரி-2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
சென்னை: தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாரி-2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
'மாரி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான 'மாரி 2' படத்தை இயக்கி வருகிறார் பாலாஜி மோகன். தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
இவர்களுடன், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், வினோத், அஜய் கோஷ், வித்யா பிரதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பல வருடங்களுக்குப் பிறகு தனுஷ் படத்துக்கு இசையமைக்கிறார்.
மாரி 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. கடைசியாக ஒரு சண்டை காட்சியுடன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் உள்ளது. விரைவில் அந்த பாடல் காட்சியும் படமாக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் தனுஷூக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











