இட்லி கடை படத்தில் இளமையாக மாறிய தனுஷ்.. பாஸ் உங்களுக்கு வயசு 40 நியாபகம் இருக்கா.. ரசிகர்கள் கேள்வி
சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து நடிப்பிலும் இயக்கத்திலும் தயாரிப்பிலும் இயங்கி வருகிறார். இது போதாது என்று பாடகராகவும் பாடலாசிரியராகவும் மாஸ் காட்டி வருகிறார். தன்னுடைய படங்களில் மட்டுமில்லாமல் மற்ற நடிகர்களுக்கும் இவர் பாடல்கள் பாடி வருகிறார். அடுத்ததாக இவரது இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதனிடையே அடுத்ததாக இட்லி கடை படத்தின் சூட்டிங்கும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. கிராமத்து பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்தில் தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். தேனி உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ், தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக ரவுண்டடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என அடுத்தடுத்த அவதாரங்களையும் எடுத்து வருகிறார். இந்நிலையில் அவரது நடிப்பில் அடுத்ததாக குபேரா படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் அவருடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் இணைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் கொடுத்து வருகின்றனர்.
இயக்குநராக மாஸ் காட்டும் தனுஷ்: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த இயக்குநர்களுடன் இணைய கமிட்டாகி வருகிறார் தனுஷ். இதனிடையே தன்னுடைய இயக்கத்திலும் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான ராயன் படம் சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் வெளியாகியிருந்தது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் சிறப்பாக ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ளது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்தப் படத்தில் முழுவதுமாக இளைஞர்களை சேர்த்துக் கொண்டு மாஸ் காட்டி யுள்ளார்.
இட்லி கடை படம்: இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் தனுஷ் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகிவருகிறது இட்லி கடை. படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்துடன் டௌன் பிக்சர்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்களும் தயாரித்து வருகின்றன. முற்றிலும் கிராமத்து கதைக்களத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திலும் இவர்தான் இசை. படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதேபோல இட்லி கடை படத்தின் இசையும் மாஸாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
புதிய லுக்கில் தனுஷ்: படத்தின் படப்பிடிப்பு தேனி, பொள்ளாச்சி மற்றும் மதுரை சுற்றுவட்டாரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் தேனி பேருந்து நிலையத்தில் படத்தின் சூட்டிங் நடந்தது. இதில் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது அங்கு மீசை தாடியை முழுவதுமாக ஷேவ் செய்த லுக்கில் தனுஷ் காணப்பட்டார். இதைபார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவரது இந்த புதிய லுக்கை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. தனுஷின் வயது 41 என்றபோதிலும் இளைஞனாக இந்த லுக்கில் அவர் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளார். அவருக்கு மட்டும் வயதே ஆகாதா என்றும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











