Dhanush: குபேரா சூட்டிங் ஸ்பாட்.. தனுஷை சுற்றி இவ்வளவு பவுன்சர்களா.. அட ராஷ்மிகா அப்படி இல்லீங்க!

மும்பை: நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மாஸ் காட்டியது. அதில் யாசகனை போன்ற லுக்கில் தனுஷ் காணப்பட்டார். ஆனால் படத்திற்கு குபேரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது முரணாக காணப்பட்டது.

இந்த படத்தின் ஷூட்டிங்கை விரைவில் நிறைவு செய்ய படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா திட்டமிட்டுள்ளார். அதற்கான வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டின் தற்போது மும்பையில் துவங்கி நடைபெற்று வருகிறது, இந்த சூட்டிங்கில் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Actor Dhanush s Kubera movie shooting spot video released


நடிகர் தனுஷின் குபேரா படம்: நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் குபேரா. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரில் யாசகன் லுக்கில் நடிகர் தனுஷ் காணப்பட்டார். அவரது வித்தியாசமான லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்நிலையில் படத்திற்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது முன்னுக்கு பின் முரணாக காணப்பட்டது. அதனால் படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் பல்வேறு யூகங்களை வெளியிட்டு வருகின்றனர்.

மும்பையில் சூட்டிங்: இந்தப் படத்தின் ஷூட்டிங் மும்பையின் தாராவி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. மும்பையின் தாராவியை மையமாகக் கொண்டு இந்தப்படத்தின் கதைக்களம் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அடிக்கடி இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக தனுஷ் மும்பை செல்வதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் பவுன்சர்கள் புடைசூழ நடிகர் தனுஷ் கெத்தாக நடந்து செல்வதை பார்க்க முடிகிறது. அவர் கோட் சூட்டில் இந்த வீடியோவில் காணப்படுகிறார்.

சூட்டிங் ஸ்பாட் வீடியோ: இந்நிலையில் அடுத்ததாக இந்த வீடியோவில் ராஷ்மிகா மந்தனாகவும் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக செல்வதை பார்க்க முடிகிறது. அவர் அமைதியாக சுடிதார் அணிந்து கொண்டு மிகவும் பொறுமையாக சூட்டிங் ஸ்பாட்டுக்கு நடந்து செல்வதாக இந்த வீடியோவில் காணப்படுகிறது. இவர்கள் இருவரின் எதிரும் புதிருமான இந்த நடைகளை போலவே இவர்களின் கேரக்டர்களும் படத்தில் அமைந்திருக்குமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என வித்தியாசமான ஜானர்களில் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ஹார்ட்ரிக் வெற்றியை பெற்றுள்ளன.

தனுஷ் இயக்கத்தில் படங்கள்: இந்த படங்களை தொடர்ந்து தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களை இயக்கியுள்ளார் தனுஷ். இதில் ராயன் படத்தின் சூட்டிங் முற்றிலும் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஏப்ரல் மாதத்திலேயே இந்த படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்ட சூழலில் படம் ஜூலை மாதத்திற்கு ரிலீஸ் தள்ளி போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். இதனிடையே அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் விரைவில் நிறைவடைய உள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை அவரது வொண்டர் பார் நிறுவனம் தயாரித்து வருகிறது. முற்றிலும் இளைஞர்களை வைத்து இந்த படத்தின் சூட்டிங்கை தனுஷ் நடத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X