Don't Miss!
- Lifestyle
சனி-சந்திர சேர்க்கையால் உருவான விஷ யோகம்: இந்த 3 ராசிக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு... உஷார்..
- News
ரத சப்தமிக்கு தயாராகும் திருப்பதி ஏழுமலையான் கோவில்..ஜன.28ல் மினி பிரம்மோற்சவம்
- Technology
மலிவு விலையில் புதிய ஸமார்ட்போனை அறிமுகம் செய்து கெத்து காட்டிய ஐடெல்.!
- Automobiles
பெட்ரோல் பங்க் ஊழியர் செய்த காரியத்தால் நடுவழியில் தவித்த குடும்பம்! கடவுளாய் வந்து காப்பாற்றிய மஹிந்திரா!
- Finance
Microsoft: 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு 10 பில்லியன் முதலீடு..!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
- Sports
விராட் கோலியின் டி20 எதிர்காலம்.. வெளிப்படையாக பேசிய ராகுல் டிராவிட்.. அட இதுதான் உண்மை காரணமா??
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
வேம்புலியுடன் யாரு இருக்காருன்னு பாருங்க.. மூணாறில் ஆரம்பமான ஹன்சிகாவின் ரவுடி பேபி ஷூட்டிங்!
சென்னை: சார்பட்டா பரம்பரை படத்துக்கு பின்னர் நடிகர் ஜான் கோக்கனை ரசிகர்கள் வேம்புலி என்றே அழைத்து வருகின்றனர்.
நடிகை ஹன்சிகா நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள ரவுடி பேபி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜான் கோக்கன் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பட பூஜை போடப்பட்ட நிலையில், மூணாறு லொகேஷனில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கைக்கு
வந்தது
வாய்க்கு
எட்டாம
போயிடுமோ..
கடையை
சாத்திய
நடிகர்..
புலம்பித்
தவிக்கும்
இயக்குநர்!

பூஜா கணவர்
எஸ்.எஸ் மியூசிக் தொகுப்பாளினியும் நடிகையுமான பூஜா ராமசந்திரனின் இரண்டாவது கணவர் தான் நடிகர் ஜான் கோக்கன். மனைவி உடன் இணைந்து வித விதமாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வைரலாக்கி வந்த அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு சார்பட்டா பரம்பரை படம் மூலமாக கிடைத்தது.

அடையாளம் தெரியாமல்
அதற்கு முன் அடையாளம் தெரியாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் அடியாள் மற்றும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ஜான் கோக்கன். சிம்புவின் ஒஸ்தி, அஜித்தின் வீரம், பாகுபலி படத்தில் காலகேயர்களில் ஒருவராக, கேஜிஎஃப்பில் அடியாள் என பல வேடங்களை தாங்கி நடித்துள்ளார்.

வெற்றி தந்த வேம்புலி
சாதாரண பேக்கிரவுண்ட் ஆர்ட்டிஸ்ட்டாகவே மற்ற இயக்குநர்கள் இவரை பார்க்க இயக்குநர் பா. ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு வில்லனாக வேம்புலி எனும் கதாபாத்திரத்தை கொடுக்க கிடைத்த வாய்ப்பை வீணாக்காமல் உசுரை கொடுத்து நடித்து மனுஷன் வெற்றி வாகை சூடி விட்டார்.

ஹன்சிகாவுடன்
வேம்புலி கதாபாத்திரம் ஹிட் அடித்த நிலையில், அடுத்ததாக ஹீரோவாக நடிப்பாரா? அல்லது டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக நடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், நடிகை ஹன்சிகாவின் ரவுடி பேபி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகி உள்ளார் ஜான் கோக்கன்.
Recommended Video

மூணாறு லொகேஷன்
காஜல் அகர்வால் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் ஹன்சிகா மாறிய நிலையில், சமீபத்தில் படத்தின் பூஜை சென்னையில் சிம்பிளான முறையில் போடப்பட்டது. கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். அறிமுக இயக்குநர் ஜே.எம். சரவணன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மூணாறில் தொடங்கி இருப்பதாக ஜான் கோக்கன் போட்டோ போட்டு அறிவித்துள்ளார்.

ராம்கியுடன் இணைந்து
சோனியா அகர்வால், மீனா, சத்யராஜ், ராம்கி, ராய் லக்ஷ்மி உள்ளிட்ட பலர் ஹன்சிகாவின் ரவுடி பேபி படத்தில் நடித்து வரும் நிலையில், நடிகர் ராம்கியுடன் இணைந்து மூணாறு லொகேஷனில் போட்டோ போட்ட நடிகர் ஜான் கோக்கன் படப்பிடிப்பு எங்கே நடக்கிறது என்கிற ஹாட் அப்டேட்டையும் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.