2 ஆண்டுகளுக்கு பிறகு சர்தார் படப்பிடிப்பு தொடங்கியது... ரசிகர்கள் ஹேப்பி !

சென்னை : கார்த்தி இருவேடத்தில் நடிக்கும் சர்தார் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இப்படத்தை இயக்குகிறார்.

ஜீ.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது.

சர்தார்

சர்தார்

சர்தார் திரைப்படத்திற்கு கடந்த 2020ம் ஆண்டு பூஜை போடப்பட்டது. ஆனால் கொரோனாவின் தீவிரத்தால் படப்பிடிப்பை தொடங்க முடியாத சூழ்நிலை உருவானது. இதையடுத்து கடந்த ஆண்டு இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது.

வந்தியதேவன்

வந்தியதேவன்

நடிகர் கார்த்தி, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக நீளமாகத் தலைமுடி வளர்த்து இருந்ததால், மற்ற திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார்.

விருமன்

விருமன்

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிந்ததும் சர்தார் திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் விருமன் திரைப்படத்திற்கு பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு கடந்த வாரம் படப்பிடிப்பு முடிவடைந்தது.

சர்தார் படப்பிடிப்பு ஆரம்பம்

சர்தார் படப்பிடிப்பு ஆரம்பம்

விருமன் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து சர்தார் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த தகவலை இயக்குனர் மித்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், மித்ரன் , கார்த்தியிடம் காட்சியை விளக்கமாக கூறுகிறார். சர்தார் திரைப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் சிம்ரன், முனிஷ்காந்த், இந்தி நடிகர் சங்கி பாண்டே, முரளி சர்மா, இளவரசு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். நீண்டநாட்களாக இத்திரைப்படம் குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியாக வில்லை. தற்போது வெளியாகி உள்ள இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியடைச் செய்துள்ளது.

போலீஸ் அதிகாரி

போலீஸ் அதிகாரி

சர்தார் திரைப்படத்தில், போலீஸ் அதிகாரியாகவும், வயதான கைதியாகவும் நடிக்க உள்ளார். இதற்கு முன்பு சிறுத்தை திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்திருந்தார். இதையடுத்து, நீண்ட வருடங்களுக்கு பிறகு சர்தார் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கஉ ள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X