யூகங்கள் பல கிளப்பிய 'யூகி' திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

சென்னை : பரியேறும் படத்திற்கு பிறகு ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராக மாறியுள்ளார் நடிகர் கதிர்.

ஹீரோவாக பல படங்களில் நடித்து வரும் அதேசமயம் முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு வேடம் என்றாலும் அதில் நடிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார்.

இந்த நிலையில் மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் த்ரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் யூகி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளது.

ஃபேவரைட் நடிகராக

ஃபேவரைட் நடிகராக

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கதிர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் மிகப்பெரிய வெற்றி பெற்றது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல பெயரையும் வெற்றியையும் பெற்றதை தொடர்ந்து இப்போது ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராக மாறி உள்ளார்.

த்ரில்லர் கதையில்

த்ரில்லர் கதையில்

ஹீரோவாக நடிக்கும் அதேசமயம் முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கதாபாத்திரத்தில் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள கதிர் விக்ரம் வேதா படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் மலையாள இயக்குனர் ஜாக் ஹரிஷ் இயக்கத்தில் புதிதாக த்ரில்லர் கதையில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

வில்லனாக நட்டி

வில்லனாக நட்டி

நட்டி நட்ராஜ்,நரேன், கயல் ஆனந்தி, பவித்ரா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் இதில் நடித்து வர கதிர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி வேடத்தில் இதில் நடித்துள்ளார். நடிகர் நட்டி இப்படத்தில் வில்லன் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கர்ணன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பி இருந்த நட்டி இந்த படத்தில் வில்லனாக நடிப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

படப்பிடிப்பு நிறைவு பெற்றது

படப்பிடிப்பு நிறைவு பெற்றது

ஏற்கனவே வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் யூகி படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். அதன் புகைப்படங்கள் இப்போது வெளியாகி உள்ளது. மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X