twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துப்பாக்கியால் சுட்டுப் பயிற்சி.. மாவோயிஸ்டு என நினைத்து நடிகர் கிருஷ்ணாவை சுற்றி வளைத்த அதிரடிப்படை

    கேரளாவில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நடிகர் கிருஷ்ணாவை மாவோயிஸ்ட் என நினைத்து போலீசார் சுற்றி வளைத்தனர்.

    |

    திருவனந்தபுரம்: படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நடிகர் கிருஷ்ணாவை மாவோயிஸ்ட் என நினைத்து அதிரடி படை போலீசார் சுற்றி வளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளும், நக்சல்களும் ஆயுத பயிற்சி எடுப்பதும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது.

    Actor Krishna rounded up by police in shooting spot

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா நடித்து வரும் 'கழுகு - 2' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தனியாருக்கு சொந்தமான இடத்தை சுற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காடு உள்ளது. இந்த படத்தில் செந்நாய்களை கிருஷ்ணா வேட்டையாடும் காட்சி இடம் பெறுகிறது.

    ஆகாயத்தில் பறந்தவாறு செந்நாய்களை குறி தவறாமல் கிருஷ்ணா சுட வேண்டும். இதற்காக அடர்ந்த காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா நிஜத் துப்பாக்கியை வைத்து துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுத்து கொண்டார். தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டதால் பீதியான மக்கள் மாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சி மேற்கொள்வதாக தகவல் தெரிவித்ததை அடுத்து அந்த பகுதிக்கு விரைந்த அதிரடிப் படையினர் துப்பாக்கி முனையில் நடிகர் கிருஷ்ணாவையும், அவரது உதவியாளர்களையும் சுற்றி வளைத்தனர்.

    Actor Krishna rounded up by police in shooting spot

    அருகில் சென்று பார்த்த போது தான், அது திரைப்படத்திற்கான ஒத்திகை என்பது தெரிய வந்தது. இருப்பினும் துப்பாக்கியை ஆய்வு செய்த காவல்துறையினர், அது நிஜத் துப்பாக்கி என்றும், லைசென்சை காண்பித்து விட்டு துப்பாக்கியை பெற்று செல்லுமாறும் கூறியுள்ளனர்.

    இந்த துப்பாக்கிகள் சென்னையைச் சார்ந்த கன் ராஜ் என்பவருக்கு சொந்தமானது. துப்பாக்கிகளுக்கான லைசென்சுடன் கேரளா விரைந்துள்ளார் கன் ராஜ். இந்த சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    The special task force police rounded actor Krishna, who was taking shooting practice with real gun for his film in Kerala forest.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X