Don't Miss!
- Finance
தங்கம் ஆர்வலர்கள் பெரும் ஷாக்.. இறக்குமதி 5% அதிகரிப்பு.. இனி விலை என்னவாகும்
- Automobiles
இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம்!
- News
"முதலிரவு".. பெண்ணை கடித்து குதறிய மாப்பிள்ளை.. "திருநங்கையா"?.. முரட்டுத்தனமான வக்கிர நபர் கைது
- Technology
உடனே நீக்குங்கள், அது சுத்தமான சீன உளவு செயலி: Google, Apple க்கு கடிதம்!
- Sports
யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா
- Lifestyle
ஜூலை மாதம் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்து அதிகமாம்...!
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
விக்ரம் வேதா இந்தி ரீமேக் சூட்டிங் ஸ்பாட்... நடிகர் மாதவன் திடீர் விசிட்!
சென்னை : நடிகர் மாதவன், விஜய் சேதுபதி இணைந்து மிரட்டிய படம் விக்ரம் வேதா.
இந்தப் படத்தை புஷ்கர் -காயத்ரி இணைந்து இயக்கியிருந்தனர். தற்போது இந்தியில் இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திப் படத்தின் சூட்டிங் தளத்திற்கு நடிகர் மாதவன் திடீர் விசிட் செய்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படம் பராசக்தி ரிலீஸ் ஆன நாள் இன்று.. ட்வீட் போட்ட பாசக்கார பேரன்!

விக்ரம் வேதா படம்
கடந்த 2017ல் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் உருவாகி வெளிவந்த படம் விக்ரம் வேதா. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இணைந்து மிரட்டியிருந்தனர். மேலும் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் மற்றும் கதிர் ஆகியோரும் நடித்திருந்தனர்.

க்ரைம் த்ரில்லர் படம்
க்ரைம் த்ரில்லர் படமாக வெளிவந்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இருவரும் போட்டிப் போட்டு நடித்திருந்தனர். மிரட்டலான அவர்களது நடிப்பையடுத்து இந்தப் படம் ஒரு ட்ரெண்ட் செட்டராக அமைந்தது. ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடினர்.

விக்ரமாதித்தன் -வேதாளம்
பழங்கால இந்திய கதையான விக்ரமாதித்தன் வேதாளம் கதையை கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் வேதாளமாக புதிரான கதையை சொல்லி மாதவனை விடை காண வைக்கிறார் விஜய் சேதுபதி. இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் கதையாக்கங்கள் சிறப்பான வகையில் சொல்லப்பட்டது கதையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்தியில் ரீமேக்
இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. படத்தின் சூட்டிங் அரபு நாடுகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியுள்ளது. இந்தியிலும் விக்ரம் வேதா என்றே பெயரிடப்பட்டுள்ளது.

புஷ்கர் -காயத்ரி இயக்கம்
இந்தியிலும் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கிவரும் இந்தப் படத்தில் மாதவன் கேரக்டரில் சையிப் அலி கான் மற்றும் விஜய் சேதுபதி கேரக்டரில் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் நிறுவனம் டி-சீரிஸ் நிறுவனம் ஆகியவை படத்தை இணைந்து தயாரித்து வருகின்றன.

சூட்டிங் ஸ்பாட்டிற்கு மாதவன் விசிட்
இதன் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் மாதவன் சென்றுள்ளார். இதை தயாரிப்பாளர் சஷிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள மாதவன், இந்தப் படத் தயாரிப்பிற்காக அவர் செய்துள்ள விஷயங்களை கண்டு மலைத்து போனதாக தெரிவித்துள்ளார்.

படக்குழுவினருக்கு பாராட்டு
ஹ்ரித்திக்கை பார்த்தால், உலகை ஆளுபவர் போல தெரிகிறது. என்ன ஒரு உடல்மொழி, தோற்றம், அட இந்தப் படம் வரலாற்றில் இடம்பிடிக்கும் என்று இப்போதே எழுதப்பட்டு விட்டது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் படக்குழுவினருக்கு அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.