6.3 உயரத்தில் ஒரு சிறுவன்… மெனக்கெடுவதை ரசிக்கிறேன்… அபிஷேக் பச்சனை பாராட்டி பார்த்திபன் ட்வீட் !
சென்னை : நடிகர் பார்த்திபன் ஒத்த செருப்பு இந்தி ரீ மேக் படப்பிடிப்பு தள புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து, அடுத்த லெவலில் தன் நடிப்பு இருக்க, அபிஷேக் பச்சன் மெனக்கெடுவதும் ரசிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாதி படம் முடிந்து விட்டதாகவும் பார்த்திபன் கூறியுள்ளார்.
ஒத்த செருப்பு தெலுங்கிலும் ரீமேக்காக உள்ளதாகவும், இந்த படத்தில் பார்த்திபன் நடித்த வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் பாண்டியா கணேஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குனர் பார்த்திபன்
இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக தருபவர். ஹவுஸ் ஃபுல், கதை திரைக்கதை வசனம் இயக்கம் போன்ற படங்கள் அதற்கு உதாரணம். இவர் கடைசியாக ஒத்த செருப்பு படத்தை எழுதி இயக்கியிருந்தார். பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்திருந்த இப்படத்தை, அவரே தயாரித்திருந்தார். உலக சினிமா வரலாற்றில், இதற்கு முன்பு ஒருவர் மட்டுமே நடித்து வெளிவந்த படங்கள் வெறும் பன்னிரண்டுதான்.

ஒத்த செருப்பு சைஸ் 7
பார்த்திபனின் இந்த முயற்சி, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மட்டுமில்லாமல், பல்வேறு விருது விழாக்களுக்கும் தேர்வு செய்யப்பட்டது. ஒருவர் மட்டுமே நடித்திருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களை ஈர்த்த இப்படம், முதலில் திரையரங்கில் வெளியாகி பின்பு ஓடிடியில் வெளியானது.

இந்தியில் அபிஷேக் பச்சன்
இந்தியில் ரீமேக்காகி வரும் ஒத்தசெருப்பு படத்தில் அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் படப்பிடிப்பின் போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மும்பை சென்றார். எலும்பு முறிவுக்காக சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டு சென்னை திரும்பிய அபிஷேக் பச்சன் ஒத்த செருப்பு ரீமேக்கில் நடித்துவருகிறார்.

6.3 உயரத்தில் ஒரு சிறுவன்
இந்நிலையில், நடிகர் பார்த்திபன் ஒத்த செருப்பு தெலுங்கு ரீ மேக் படப்பிடிப்பு தொடங்கியது குறித்து ட்வீ ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 6.3 உயரத்தில் ஒரு சிறுவன். இன்னும் உயரிய அப்பாவுக்குக் குழந்தை. உலகப் புகழுக்கு மகனாகவும், உலக அழகிக்கு கணவனாகவும்,தானிருக்கும் அனுபவத்தை தானியங்கி இயந்திரமாய் தட்டிவிட்டாரென்றால் ரசிக்கலாம்-மணிகணக்கில்! முதலில் இப்படி ஒரு படத்தை தேர்வு செய்ததும்,தானே தயாரிப்பதும், ரசனை என்று பார்த்திபன் கூறியுள்ளார்.

மெனக்கெடுவதை ரசிக்கிறேன்
மேலும், பெருமையின்றி அலர்ட்டா இருப்பதும், அலட்டாமல் இருப்பதும் அடுத்த லெவலில் தன் நடிப்பு இருக்க மெனக்கெடுவதும் ரசிக்கிறேன் mr.ABISHEK BACHAN!!! பாதிப்படம் கடந்துவிட்டேன்.எனக்கே முதல் ஹிந்தி, என்னுடன் ராம்ஜி (cinematography)சத்யா(music) சுதர்சன்(editor) என்று தமிழ் அள்ளிப் போகிறேன் என்று பார்த்திபன் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கில்
ஒத்த செருப்பு திரைப்படம் தெலுங்கில் தயாராகி வருகிறது இந்த படத்தில் பார்த்திபன் நடித்த வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் பாண்டியா கணேஷ் என்பவர் நடிக்க உள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்தை தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் சந்திரா என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் பணிபுரியும் டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது


Click it and Unblock the Notifications











