இந்த முறை லண்டனில் வேட்டை.. துப்பறிவாளன் 2 குறித்து துப்புக் கொடுத்த பிரசன்னா!

Recommended Video

Actor Prasanna shares Thupparivaalan 2 pics | துப்பறிவாளன் 2 குறித்த ட்வீட் செய்த பிரசன்னா!

சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் துப்பறிவாளன் 2ம் பாகம் லண்டனில் படமாக்கப்பட்டு வருகிறது.

2017ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, மீண்டும் மிஷ்கினுடன் நடிகர் விஷால் இணைந்துள்ளார்.

லண்டனில் விஷாலுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு படம் குறித்த மாஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

கம்பேக் பிரசன்னா

கம்பேக் பிரசன்னா

ஹீரோவாக நடித்து வந்த பிரசன்னாவிற்கு தமிழ் சினிமாவில் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் வில்லன் அவதாரம் எடுத்த பிரசன்னாவுக்கு கிடைத்த வரவேற்பால், தொடர்ந்து வில்லனாகவும் செகண்ட் ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்.

மாஃபியா

மாஃபியா

துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடித்து வரும் மாஃபியா படத்திலும் மிரட்டல் வில்லனாக பிரசன்னா நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டீஸர் பிரசன்னா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஷெர்லாக் ஹோம்ஸ்

ஹாலிவுட் மற்றும் கொரிய படங்களின் தாக்கத்தால், அதே போன்ற படங்களை தமிழில் இயக்கி வருகிறார் இயக்குநர் மிஷ்கின். பேட்மேன் படத்தின் தாக்கத்தால் ஜீவாவின் முகமூடி படத்தை உருவாக்கிய மிஷ்கினுக்கு அந்த படம் பெரிதாக கைக்கொடுக்கவில்லை. ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தை இன்ஸ்பிரேஷனாக கொண்டு எடுத்த துப்பறிவாளன் வெற்றிபெறவே, தற்போது துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வருகிறார்.

லண்டனில் வேட்டை

துப்பறிவாளன் படத்தை லோக்கலில் எடுத்து வெற்றி பெற்ற நிலையில், துப்பறிவாளன் 2 படத்தை அதிக பட்ஜெட்டில் முழுக்க முழுக்க லண்டனில் எடுத்து வருகிறது படக்குழு. இந்நிலையில், விஷால் மற்றும் பிரசன்னா இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரசன்னா, கனியன் பூங்குன்றன் மற்றும் மனோவின் வேட்டை இந்த முறை லண்டனில் எனக் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X