'அண்ணே நான் உங்கள யோவ்னு திட்டிக்கவா '.. விஜயை புகழ்ந்த ராஜாராணி பாண்டியன் !

சென்னை : நடிகர் ராஜா ராணி பாண்டியன் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் போது நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்துளளார்.

ராஜா ராணி படத்தின் மூலம் பிரபலமடைந்த ராஜாராணி பாண்டியன் பல முக்கிய நடிகர்களுடன் நடித்து வரும் நிலையில் தற்போது விஜயுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

Actor Raja Rani Pandian shared an interesting of the master shooting
Actor Raja Rani Pandian shared an interesting of the master shooting

படப்பிடிப்பின் போது விஜய் ஒரு காட்சியில் ' யோவ்' என்று திட்டுவதை போல காட்சி எடுக்கபட இருந்ததாம் . ஆனால் அந்த காட்சியின் படப்பிடிப்புக்கு முன் விஜய் வந்து 'அண்னே நான் உங்கள யோவ்னு திட்டிக்கவா ' என மிக பணிவுடன் கேட்டார் ,மற்ற நடிகர்களாக இருந்தால் இப்படி கேட்டிருக்க மாட்டார்கள் நேரடியாக காட்சியை நடித்து கொடுத்திருப்பார்கள். ஆனால் விஜய் அதை செய்யவில்லை அதுதான் விஜயை மற்ற நடிகர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது என உருக்கமாக கூறினார்.

மேலும் நான் ஒரு சினிமா வெறியன் என்று பகிர்ந்துள்ள ராஜாராணி பாண்டியன் சிறு வயதில் படதலைப்பில் இருக்கும் எழுத்துக்களுக்கு கேற்ப படங்களை பார்பேன் என்று கூறியுள்ளார். அஃதாவது ஒலி விளக்கு என்ற தலைப்பு இருந்தால் 6 முறை அந்த படத்தை பார்பேன். எத்தனை எழுத்து இருக்கிறதோ அத்தனை முறை படம் பார்ப்பேன் சிறு வயதில் அப்படி ஒரு சினிமா வெறியன் என்று கூறியுள்ளார் .

Actor Raja Rani Pandian shared an interesting of the master shooting

மேலும் சிறுவயதில் என் நண்பனுடன் தான் இத்தனை படங்களை பார்த்தேன் . அந்த நண்பனை மதுரையில் ரஜினிமுருகன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது அழைத்து சென்று சிவகார்த்திகேயன் மற்றும் சூரிக்கு அறிமுகம் செய்தேன் ஆனால் என்னுடைய நண்பனை பார்த்து அவர்கள் சிரித்தார்கள், ஏனெனில் என் நண்பன் என்னை போல் டை அடிக்காமல் முதுமையாக காணபட்டதால் நான் பொய் சொல்கிறேன் என்று முதலில் அவர்கள் நினைத்தார்கள் என்று பகிர்ந்துள்ளார் ராஜா ராணி பாண்டியன்.

மாஸ்டர் படத்தின் வெளியீடு தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிபோய் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த வருத்தம் எனக்கும் இருக்கிறது என்று கூறியுள்ளார் பாண்டியன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X