ஜெயிலர் சூட்டிங் ஸ்பாட்.. வெளியானது ரஜினியின் லேட்டஸ்ட் லுக்..ரசிகர்களுடன் புகைப்படம்!
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் ஜெயில் செட் போடப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

ரஜினியின் ஜெயிலர் படம்
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் ஜெயில் செட் போடப்பட்டு நடைபெற்று வருகிறது. ரஜினியின் 169வது படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

கலவையான விமர்சனங்கள்
முன்னதாக பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களால் நெல்சன் இந்தப் படத்தை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற படங்களை வெற்றிப் படமாக கொடுத்த நெல்சன், அந்த வெற்றியை பீஸ்ட் படத்தில் ஹாட்ரிக்காக கொடுக்க தவறியுள்ளார்.

ரஜினியின் அண்ணாத்த படம்
இதேபோல ரஜினியின் முந்தைய படமான அண்ணாத்த படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. ஆனாலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் வசூல்ரீதியாக சிறப்பாக அமைந்தது. இதனிடையே, இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினி இணைந்துள்ளார்.

ரஜினியுடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்
இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்துவரும் சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் இணைந்துள்ளார். மேலும் படத்தில் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.

முக்கியமான படம்
இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் இருவருக்குமே ஜெயிலர் படம் முக்கியமான படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை வெற்றிப்படமாக்கும் கட்டாயம் இருவருக்கும் உள்ள நிலையில், மிகுந்த கவனத்துடன் இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்
இதனிடையே இந்தப் படத்தில் ரஜினியின் கெட்டப் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களுடன் ஜெயிலர் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படங்களில் தனியாகவும் ரசிகர்களுடன் இணைந்தும் ரஜினி காணப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











