படப்பிடிப்பில் விபத்து.. ரஜினி பட வில்லன் நடிகருக்கு தலையில் காயம்.. மருத்துவமனையில் அனுமதி

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக நடிகர் சம்பத் ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

ரஜினி பட வில்லன் நடிகருக்கு தலையில் காயம்.. வீடியோ

சென்னை: பிரபு சாலமன் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த நடிகர் சம்பத் ராம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் சுமார் 20 வருடங்களாக நடித்து வருபவர் நடிகர் சம்பத் ராம். ரஜினி, கமல், அஜித், விஜய் என தமிழில் முன்னணி நடிகர்கலின் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

விரைவில் இவர் நடித்துள்ள 'தட்றோம் தூக்குறோம், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருக்கின்றன. தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில், ராணா நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் சம்பத் ராம்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

சண்டைகாட்சி:

சண்டைகாட்சி:

கடந்த 15 தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்றிற்கான ஒத்திகை நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக சம்பத் ராமின் தலையில் அடிபட்டது. உடனடியாக முதலுதவி செய்யப்பட, சிறிய காயம் என நினைத்து சமாளித்துக் கொண்டு சிறிதுநேரத்திலேயே மீண்டும் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு சென்னைக்கு திரும்பி விட்டார் சம்பத்.

தலைசுற்றல், மயக்கம்:

தலைசுற்றல், மயக்கம்:

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீர் மயக்கம், தலை சுற்றல் என உடல் உபாதைகளால் அவதிப்பட்டுள்ளார் சம்பத் ராம். அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து பார்த்ததில், படப்பிடிப்பில் அடிபட்ட இடத்தில் தலையில் இரத்தம் கட்டியிருப்பது தெரிய வந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

சிகிச்சை:

சிகிச்சை:

உடனடியாக சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ஊசி மூலம் தலையில் ஏற்பட்ட இரத்த உரைதலை மருத்துவர்கள் சரி செய்துள்ளனர். தற்போது அவர் உடல்நிலை சீராகி வருகிறது.

மீண்டும் படப்பிடிப்பு:

மீண்டும் படப்பிடிப்பு:

இன்னும் சில தினங்களில் எப்போதும் போல படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்ள இருக்கிறார். பிரபு சாலமன் படத்திலும் இவருக்கான பகுதி இன்னும் படமாக்கப்பட வேண்டி இருப்பதால், இன்னும் சில தினங்களில் மீண்டும் வழக்கம் போல படப்பிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டிருக்கிறார் சம்பத் ராம்.

பிரபு சாலமன் வேதனை:

பிரபு சாலமன் வேதனை:

தனது படத்தில் ஏற்பட்ட விபத்தால் சம்பத் ராமுக்கு ஏற்பட்ட இந்த உடல் நலக்குறைவை அறிந்த இயக்குநர் பிரபு சாலமன், மிகவும் வேதனையடைந்துள்ளார். திரையுலக பிரபலங்கள் பலரும் சம்பத் ராமை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X