சொன்ன நாளை விட வேகமாகப் படத்தை முடித்த இயக்குனர்... கட்டிப்பிடித்து தங்க செயின் பரிசளித்த ஹீரோ!

By

சென்னை: ஜோதிகா நடிக்கும் படத்தை இயக்கி வரும் 'கத்துக்குட்டி' சரவணவனுக்கு அந்தப் படத்தின் ஹீரோ. தங்கச் சங்கிலி பரிசளித்துள்ளார்.

Recommended Video

Nazriya Pendant Secret | Kushbhu Sundar C Silver jubliee | Anegan Actress with Corona

'கத்துக்குட்டி' படம் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குனர் சரவணன், அடுத்து இயக்கும் படத்தில் சசிகுமார், ஜோதிகா நடிக்கின்றனர்.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் இருவரும் அண்ணன் -தங்கையாக நடிக்கின்றனர்.

தஞ்சாவூர் பெண்

தஞ்சாவூர் பெண்

நடிகர் சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிஜாரோஸ், சமுத்திரக்கனி, சூரி உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் கதை, தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. ஜோதிகா முதன்முறையாக தஞ்சாவூர் பெண்ணாக நடிக்கிறார். இதற்காகப் படக்குழு அவரது தோற்றத்தை மாற்றியுள்ளது.

குணசித்திர சூரி

குணசித்திர சூரி

இதன் படப்பிடிப்பு முழுவதும் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடந்தது. இந்தப் படத்தில் நடிகர் சூரி முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இதுவரை காமெடி கேரக்டரில் பார்த்த சூரி, இதில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார். இரண்டு குடும்பங்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் கேரக்டர் அவருக்கு.

தங்கச் சங்கிலி

தங்கச் சங்கிலி

இதன் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தஞ்சாவூரில் நிறைவடைந்தது. இதையடுத்து படத்தின் ஹீரோ சசிகுமார், இயக்குனர் சரவணனுக்கு தங்கச் சங்கிலி பரிசளித்தார். அங்கு படக்குழுவினரிடம் பேசிய அவர், 'சொன்ன நாட்களை விட குறைந்த நாளிலேயே இயக்குனர் படத்தை முடித்திருக்கிறார். அவரது உழைப்பு அபாரமானது. அவருக்கு படத்தில் பணியாற்றிவர்களின் சார்பில் இந்தத் தங்க சங்கிலியை அணிவிக்கிறேன்' என்று தங்கச் சங்கிலியை அணிவித்தார்.

மன்னிப்பு

மன்னிப்பு

இயக்குனர் சரவணன் கூறும்போது, 'படத்தில் பணியாற்றிய சிலரிடம் வேலை நிமித்தமாகக் கொஞ்சம் கடுமையாகப் பேசியிருக்கலாம். அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் நன்றி' என்றார். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் சென்னையில் சில நாட்கள் பேட்ச் ஒர்க் இருக்கிறது. அதோடு படம் முடிகிறது படக்குழு தெரிவித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X