மனைவியுடன் நடிக்கப் போகும் விளம்பரப் படம்-பதட்டத்தில் ஷாருக் கான்

ஷாருக்கும், அவரது மனைவி கெளரியும் இணைந்து டி டெக்கார் நிறுவன விளம்பரத்தில் நடிக்கின்றனர். இதுகுறித்து படபடப்பாக இருக்கிறாராம் ஷாருக்.
இதுகுறித்து ஷாருக் தனது ட்விட்டர் தளத்தில் கூறுகையில், நாளை பெரிய ஷூட்டிங். தயாராகி வருகிறேன். கெளரியுன் டி டெக்கார் விளம்பர ஷூட்டிங் இது. சற்று பதட்டமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த விளம்பரத்தில் ஷாருக்கையும், கெளரியையும் நடிக்க வைப்பது குறித்து டி டெக்கார் நிறுவன நிர்வாக இயக்குநர் அஜய் அரோரா கூறுகையில், பல கோடி இந்திய இல்லங்களில் தெரிந்த பெயர் ஷாருக் மற்றும் கெளரி. எனவேதான் இந்த ஜோடியை வைத்து விளம்பரத்தை ஷூட் செய்ய திட்டமிட்டோம் என்றார்.
ஐஸ்வர்யா, கஜோல் என சூப்பர் ஸ்டார் ஹீரோயின்களுடன் ஜோடி போட அச்சப்படாத ஷாருக், சொந்த மனைவியோடு நடிக்க சற்று டென்ஷனாக இருப்பது சுவாரஸ்யமானதுதான்.
Comments
கெளரி கான் டிவி விளம்பரப் படப்பிடிப்பு பதட்டத்தில் ஷாருக் கான் ஷாருக் கான் gauri khan sharukh khan srk nervous tv commercial shooting


Click it and Unblock the Notifications