twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மனைவியுடன் நடிக்கப் போகும் விளம்பரப் படம்-பதட்டத்தில் ஷாருக் கான்

    By Sudha
    |

    Sharukh with Gauri
    எத்தனையோ முறை கேமராவை கொஞ்சமும் தயக்கம், நடுக்கம், பதட்டம் இல்லாமல் சந்தித்துள்ள சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், முதல் முறையாக கேமராவைப் பார்க்க தயக்கத்துடன் இருக்கிறாராம். அது தனது மனைவி கெளரியுடன் நடிக்கப் போகும் டிவி விளம்பரத்திற்கான ஷூட்டிங்கை நினைத்து.

    ஷாருக்கும், அவரது மனைவி கெளரியும் இணைந்து டி டெக்கார் நிறுவன விளம்பரத்தில் நடிக்கின்றனர். இதுகுறித்து படபடப்பாக இருக்கிறாராம் ஷாருக்.

    இதுகுறித்து ஷாருக் தனது ட்விட்டர் தளத்தில் கூறுகையில், நாளை பெரிய ஷூட்டிங். தயாராகி வருகிறேன். கெளரியுன் டி டெக்கார் விளம்பர ஷூட்டிங் இது. சற்று பதட்டமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    இந்த விளம்பரத்தில் ஷாருக்கையும், கெளரியையும் நடிக்க வைப்பது குறித்து டி டெக்கார் நிறுவன நிர்வாக இயக்குநர் அஜய் அரோரா கூறுகையில், பல கோடி இந்திய இல்லங்களில் தெரிந்த பெயர் ஷாருக் மற்றும் கெளரி. எனவேதான் இந்த ஜோடியை வைத்து விளம்பரத்தை ஷூட் செய்ய திட்டமிட்டோம் என்றார்.

    ஐஸ்வர்யா, கஜோல் என சூப்பர் ஸ்டார் ஹீரோயின்களுடன் ஜோடி போட அச்சப்படாத ஷாருக், சொந்த மனைவியோடு நடிக்க சற்று டென்ஷனாக இருப்பது சுவாரஸ்யமானதுதான்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X