க்ளீன் ஷேவ்.. புது கெட்டப்பில் சிம்பு.. வைரலாகும் வெந்து தணிந்தது காடு ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!
சென்னை: நடிகர் சிம்பு புது கெட்டப்பில் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் பங்கேற்றிற்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
பல வெற்றி படங்களை கொடுத்துள்ள சிம்பு, நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்டுள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்
நடிகர் சிம்பு பல்வேறு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அதற்கு முந்தைய படங்களில் வெயிட் கூடி இருந்த சிம்பு ஈஸ்வரன் படத்திற்காக அதிகளவு எடையை குறைத்தார். மீண்டும் பழைய சிம்புவை பார்த்த ரசிகர்கள் அவரை கொண்டாடி தீர்த்தனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு
தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இதன் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து மஹா, பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

வெந்து தணிந்தது காடு ஃபர்ஸ்ட் லுக்
இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இதில் கொஞ்சமும் அடையாளம் தெரியாதபடி மொத்தமாய் மாறி இருந்தார் நடிகர் சிம்பு.

எதிர்பார்ப்பை எகிற வைத்த போஸ்டர்
படத்தின் போஸ்டரே இப்படி இருக்கிறது என்றால் படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது இந்த போஸ்டர். இயக்குநர் கவுதம் மேனன், நதிகளிலே நீராடும் சூரியன் படத்தையே சிம்புவை வைத்து எடுக்க நினைத்ததாகவும் ஆனால், அசுரன் போல ஒரு படம் செய்ய வேண்டும் என்று சிம்பு விரும்பியதால் வெந்து தணிந்தது காடு படத்தை எடுக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

எழுத்தாளர் ஜெயமோகன் பகிர்ந்த தகவல்
மேலும் சிம்புவின் விருப்பம் காரணமாகவே வெந்து தணிந்தது காடு படம் முதலில் எடுக்கப்படுகிறது. இந்தப் படம் ஜெயமோகன் எழுதிய அக்னி குஞ்சொன்று கண்டேன் கதையை தழுவி எடுக்கப்படுகிறது. இதுகுறித்து தெரிவித்துள்ள எழுத்தாளர் ஜெயமோகன், கௌதம் வாசுதேவ் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' முதலில் நதிகளில் நீராடும் சூரியன் என்று பெயரிடப்பட்டிருந்த படம்தான் என கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட சிறுவன் போல இருக்கிறார்
அந்தக்கதை மென்மையான நகர்ப்புறக் காதல்கதை என்றும் அதுவும் பின்னர் படமாகவே வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார். சிலம்பரசன் இப்போது உடல்மெலிந்து, மென்மீசையுடன் மிக இளைஞராக, கிட்டத்தட்ட சிறுவன் போல இருக்கிறார். அவருக்கு பொருந்தும் கதை என்பதனால் இந்தக்கதை தெரிவு செய்யப்பட்டது என்றும் அவருக்காக கதை உருவாக்கப்படவில்லை, கதைக்காக அவரே தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார் என்றும் பதிவிட்டுள்ளார்.

கிராமப்புற கதை அல்ல இது
மேலும் அசுரன் அல்லது கர்ணன் போன்ற கிராமப்புறக் கதை அல்ல இது. கிராமப்புறமும் உண்டு. பரபரப்பான, ஆனால் மிகையான சாகசங்கள் ஏதும் இல்லாத நம்பகமான சினிமா. வேறு படங்களின் சாயல் ஏதும் இல்லாதது. கௌதம் வாசுதேவ் மேனனின் ஸ்டைலான படமாக்கல் உடையது. ஆனால் rustic என்று சொல்லப்படும் கரடுமுரடான அழகியல் கொண்டது.. என தெரிவித்துள்ளார்.

ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு தளத்தின் போட்டோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் மீசை தாடி எதுவும் இல்லாமல் க்ளீன் ஷேவ்வில் நடிகர் சிம்பு நடிகை ராதிகாவுடன அமர்ந்து பேசுகிறார்.

கவுதமுடன் பிரியாணி சாப்பிடும் ராதிகா
இதன் மூலம் இப்படத்தில் நடிகை ராதிகாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது தெரியவந்துள்ளது. மேலும் நடிகை ராதிகா இயக்குநர் கவுதம் மேனனுடன் சேர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி சாப்பிடும் போட்டோவும் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் சிம்புவை கொண்டாடி வருகின்றனர்.

சிம்பு ஹேஷ்டேக் ட்ரென்டிங்கில் டாப்
#VendhuThanindhadhuKaadu என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வரும் ரசிகர்கள், அந்த போட்டோக்களை தங்களின் சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அதோடு வெந்து தணிந்தது காடு திரைப்படம் பக்கா கிராம பின்னணியில் உருவாகிறது என்றும் கூறி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் டாப்பில் உள்ளது.


Click it and Unblock the Notifications











