சிவகார்த்திகேயனின் புதிய படம்.... பூஜையுடன் துவங்கியது படப்பிடிப்பு!
நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படத்துக்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
Recommended Video

சென்னை: 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், அடுத்தடுத்து மாஸ் ஹீரோ படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'வேலைக்காரன்'.

இதையடுத்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடித்துள்ள 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கான துவக்கவிழா அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில், 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் துவக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்துக்கான பூஜையில், சிவகார்த்திகேயன், கருணாகரன், யோகிபாபு, பானுப்ரியா, இயக்குனர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன் முதல்நாள் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.



Click it and Unblock the Notifications











