கஜகஸ்தானில் இருந்து திரும்பினார் விஜய் ஆண்டனி... 'காக்கி'க்காக எண்ணூரில் அதிரிபுதிரி ஆக்ரோஷ ஃபைட்!

By

சென்னை: அக்னிச்சிறகுகள் படத்துக்காக கஜகஸ்தான் சென்றிருந்த நடிகர் விஜய் ஆண்டனி சென்னை திரும்பினார். இப்போது காக்கி படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

மூடர் கூடம் படத்துக்குப் பிறகு அக்னிச் சிறகுகள் படத்தை இயக்கி வருகிறார் நவீன். அருண்
விஜய், விஜய் ஆண்டனி ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

அக்‌ஷரா ஹாசன், இந்தி நடிகை ரைமா சென், சென்ராயன், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, நாசர், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

கஜகஸ்தானில்

கஜகஸ்தானில்

அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடராஜன் சங்கரன் இசை அமைக்கிறார். பாட்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் ஷூட்டிங் ரஷ்யாவில் கடும் பனிப்பொழிவில் நடந்தது. பின்னர் இதன் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு ஜனவரி 1 ஆம் தேதி கஜகஸ்தானில் தொடங்கியது.

குதிரை சண்டை

குதிரை சண்டை

அங்கு விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்‌ஷரா ஹாசன், சென்ட்ராயன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. உறைபனிகளுக்கு நடுவே அருண்விஜய் போடும் குதிரை சண்டைக் காட்சிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாயின. அருண் விஜய் ஏற்கனவே சென்னை திரும்பிவிட, கிட்டத்தட்ட 50 நாட்கள் அங்கு நடந்த படப்பிடிப்பை முடித்துக்கொண்டு விஜய் ஆண்டனி கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்தார்.

ஆக்‌ஷன் காட்சிகள்

ஆக்‌ஷன் காட்சிகள்

இதையடுத்து இப்போது அவர் காக்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதன் ஷூட்டிங் கடந்த திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. எண்ணூரில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்படுகின்றனர். விஜய் ஆண்டனியுடன் வில்லன் ஆட்கள் மோதும் காட்சிகளை ஸ்டன்ட் இயக்குனர் கனல் கண்ணன் மாஸ்டர் படமாக்குகிறார்.

சத்யராஜ்

சத்யராஜ்

இந்தப் படத்தை 'வாய்மை' செந்தில்குமார் தனது ஓபன் தியேட்டர் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்குகிறார். இதில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நடிகர் ஶ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் 15 நாட்கள் தொடர்ந்து இதன் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

தமிழரசன்

தமிழரசன்

விஜய் ஆண்டனி நடிப்பில், பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள தமிழரசன் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் ரம்யா நம்பீசன், மலையாள நடிகர் சுரேஷ்கோபி, சோனு சூட், சங்கீதா, பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.என்.எஸ்.மூவிஸ் சார்பில் கவுசல்யா ராணி தயாரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X