மை டியர் லிசா ஷூட்டிங்கில் விபத்து... விஜய்வசந்த் கால் முறிந்தது!
மை டியர் லிசா படப்பிடிப்பில் நடிகர் விஜய்வசந்தின் கால் முறிந்தது.
Recommended Video

சென்னை: மை டியர் லிசா படப்பிடிப்பின் போது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஜய்வசந்தின் கால் முறிந்தது.
30 வருடங்களுக்கு முன்பு வெளியாகி ஹிட்டடித்த திகில் படம் மை டியர் லிசா. மலையாளத்தில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்ட இந்தப் படம், இன்றளவும் மிரட்டும் பேய்ப்படங்களில் ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், தற்போது இதே பெயரில் அறிமுக இயக்குநர் ரஞ்சன் கிருஷ்ணதேவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தின் நாயகனாக விஜய் வசந்தும், நாயகியாக சாந்தினியும் நடித்து வருகின்றனர்.
திகில் படமாக உருவாகிக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறு விறுப்பாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு விஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் சண்டை காட்சி படமாகிக் கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக விஜய் வசந்த்தின் கால் பள்ளம் ஒன்றில் சிக்கியது. இதில், தடுமாறி கீழே விழுந்ததில் அவரது கால் முறிந்தது
உடனடியாக படக்குழுவினர் அவரை மீட்டு ஊட்டியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து மூன்று வாரம் சிகிச்சை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து சென்னைத் திரும்பிய அவருக்கு இங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், மை டியர் லிசா படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











